விஜய் டிவியின் காமெடியனாக இருந்து பின்னர் தமிழ் சினிமாவின் முன்னணி காமெடியன்களில் ஒருவராக அவதரித்தவர் சந்தானம்.முன்னணி காமெடியனாக உயர்ந்த பின்னர் கதாநாயகனாகவும் உருவெடுத்தார் சந்தானம்.ஹீரோவாக இவர் நடித்த படங்களும் ஹிட் அடித்தன.

சமீபத்தில் இவர் நடித்த டிக்கிலோனா திரைப்படம் நேரடியாக ஜீ 5 தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இதனை தொடர்ந்து சில முக்கிய படங்களில் நடித்து வருகிறார்.அடுத்ததாக இவர் நடித்து வரும் சபாபதி படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

சபாபதி படத்தினை ஸ்ரீனிவாஸ் ராவ் இயக்கியுள்ளார்.சாம் சி எஸ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.சந்தானம் ஹீரோவாக நடிக்க ப்ரீதி வர்மா இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.குக் வித் கோமாளி புகழ்,எஸ் எஸ் பாஸ்கர் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தினை RK என்டேர்டைன்மெண்ட்ஸ் தயாரித்துள்ளனர்.இந்த படம் வரும் நவம்பர் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வந்தது.தற்போது இந்த படத்தின் முக்கிய காட்சி ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.இந்த காட்சியை கீழே உள்ள லிங்கில் காணலாம்