தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் மோகன்பாபு. தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளிலும் நடிகர் மோகன்பாபு கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பல விதமான கதாப்பாத்திரங்களில் நடித்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.

கதாநாயகனாக மட்டுமல்லாமல் சிறந்த குணச்சித்திர நடிகராகவும், துணை நடிகராகவும் வில்லனாகவும் நடித்துள்ள நடிகர் மோகன்பாபு தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பல திரைப்படங்களில் மிரட்டலான வில்லனாகவும் நண்பனாகவும் நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

கடைசியாக நடிகர் சூர்யா நடித்து கடந்த ஆண்டு(2020) வெளிவந்த சூரரைப்போற்று திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த மோகன்பாபு, அடுத்ததாக தெலுங்கில் சன் ஆஃப் இந்தியா திரைப்படத்தில் கதாநாயகனாகவும் சாகுந்தலம் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு அவர்களின் இளைய சகோதரர் ரங்கசாமி நாயுடு மாரடைப்பு காரணமாக இன்று (நவம்பர் 17) உயிரிழந்துள்ளார். நடிகர் மோகன்பாபுவின் சகோதரர் ரங்கசாமி நாயுடுவின் மறைவுக்கு திரையுலகைச் சேர்ந்த பல பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.