தமிழகத்தில் கனமழை பெய்து வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு மாவட்டங்களிலும் இன்றும் நாளையும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

தென் கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, மேற்கு திசையில் நகர்ந்து இன்று தெற்கு ஆந்திரா - வட தமிழக கடற்கரை நோக்கி நெருங்கி வருகிறது. 

இதன் காரணமாக, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. அத்துடன், “தற்போது தமிழகத்தில் மேலும் 4 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யக்கூடும்” என்றும், வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 

அதன்படி, “சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய 4 மாவட்டங்களுக்கும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், மழை பாதிப்பு முன்னெச்சரிக்கையாக நடவடிக்கையாக தமிழ்நாட்டில் தற்போது வரை 23 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

இதனால், “சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

இதன் காரணமாக, தமிழகத்திற்கு இன்று ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

கனமழை காரணமாக தேனி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. 

திண்டுக்கல், வேலூர், ராணிப்பேட்டை, புதுக்கோட்டை  மாவட்டங்களிலும் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. சேலம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதே போல் திண்டுக்கல், திருவாரூர், கள்ளக்குறிச்சி, நாகை, மயிலாடுதுறை, விழுப்புரம், அரியலூர், தஞ்சை, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் நெல்லை, செங்கல்பட்டு, தூத்துக்குடி, கடலூர், சேலம், திருவண்ணாமலை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து பெரம்பலூரில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

அதே போல், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது.

முக்கியமாக, திருப்பத்தூர் மாவட்டத்தில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

ஒட்டுமொத்தமாக, இன்று 25 மாவட்ட பள்ளிகளுக்கும், 18 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.