பேச்சுலர் படத்தின் சென்சார் குறித்த தகவல் ! விவரம் உள்ளே
By Aravind Selvam | Galatta | November 17, 2021 20:31 PM IST
இசையமைப்பாளராக இருந்து தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் இளம் நடிகராக இருப்பவர் ஜீ வி பிரகாஷ் குமார்.இவர் நடிப்பில் கடைசியாக வணக்கம் டா மாப்ள திரைப்படம் நேரடியாக சன் NXT தளத்தில் வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது.இவர் நடிப்பில் சில படங்கள் அடுத்து ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.
இவர் அடுத்ததாக நடித்துள்ள பேச்சுலர் படத்தை புதுமுக இயக்குனர் சதிஷ் செல்வகுமார் இயக்கியுள்ளார்.Axess பிலிம் பேக்டரி நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்ப்பையும்,பரபரப்பையும் உண்டாக்கியது.திபு நினன் தாமஸ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
பிரபல மாடல் திவ்யா பாரதி இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக என்ட்ரி கொடுக்கவுள்ளார்.இந்த படத்தின் டீஸர் மற்றும் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தின் ரிலீஸ் கொரோனா காரணமாக தள்ளிப்போனது
இந்த படம் வரும் டிசம்பர் 3ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இதனை அடுத்து இந்த படத்தின் சென்சார் வேலைகள் நிறைவடைந்து A சர்டிபிகேட் கிடைத்துள்ளது என்று பாடகக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
#Bachelor Certified 'A'
— Axess film factory (@AxessFilm) November 17, 2021
Let's enjoy the BACHELOR weekend in theatres from December 3rd@gvprakash @Dili_AFF @AxessFilm #dirSathish @SakthiFilmFctry @thenieswar @Sanlokesh @divyabarti2801 @itspooranesh @APIfilms @gopiprasannaa @thinkmusicindia @DoneChannel1 @Duraikv @decoffl pic.twitter.com/hqieSWSeFr