சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஹூட் ஆப் மூலமாக மறைந்த புனீத் ராஜ்குமாருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

rajini

கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டாரான புனீத் ராஜ்குமார் கடந்த அக்டோபர் மாதம் 29ம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். 46 வயதில் புனீத் ராஜ்குமார் உயிரிழந்தது திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பெங்களூர் கண்டீரவா மைதானத்தில் அவரின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைத்து பின்பு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

பல்லாயிரக்கணக்கான பொதுமக்களும், ரசிகர்களும் , புனீத்  ராஜ்குமார் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள் . இருப்பினும் தமிழ் திரையுலகத்தில் இருந்து சிவகார்த்திகேயன் விஜய்சேதுபதி, ஆகியோர் புனீத் ராஜ்குமார் நினைவிடத்தில்  அஞ்சலி செலுத்தினார்கள் பின்னர் கடந்த வாரம், நடிகர் சூர்யா புனீத் ராஜ்குமாரின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்திவிட்டு, கண்ணீருடன் அவருடைய நினைவுகளை பகிர்ந்து கொண்ட நிலையில் அவர்களை தொடர்ந்து இன்று பெங்களூரில்  உதயநிதி ஸ்டாலின் புனீத் ராஜ்குமார் நினைவிடத்தில் சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். 

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஹூட் ஆப்பில் வெளியிட்டுள்ள ஆடியோ பதிவில், ("அனைவருக்கும் வணக்கம் சிகிச்சை முடிஞ்சு நல்ல குணமாகிவருகிறேன்.  நான் மருத்துவமனையில் இருக்கும் பொழுது புனீத் ராஜ் குமார் அவர்கள்  இறந்த  விஷயத்தை எனக்கு இரண்டு நாள் கழித்துதான் தெரிவித்தார்கள் அதைக் கேட்டு  நான் மிகவும்  மனவேதனைப்பட்டேன்.மனதிற்கு மிகவும் வேதனையாக  இருந்ததாகவும்  என் கண்ணிற்கு முன்னால்  வளர்ந்த குழந்தை திறமையான அன்பும் பண்பும் கொண்ட அருமையான குழந்தை நல்ல பேரும் புகழும் உச்சியில்  இருக்கும் பொழுதே இவ்வளவு சிறு வயதிலேயே நம்மை விட்டு அவர் மறைந்துவிட்டார். அவருடைய இழப்பு கன்னட சினிமாத்துறைக்கு ஈடுகட்டவே முடியாது ஒன்று.  அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தாருக்கு ஆறுதல் சொல்ல எனக்கு வார்த்தைகளே இல்லை. புனீத் ராஜ்குமார் ஆத்மா சாந்தி அடையட்டும்" என தெரிவித்து, "நீ இல்லை என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை புனீத்" )என நடிகர் ரஜினிகாந்த்  உருக்கமாக பதிவிட்டுள்ளார்.