தமிழ் சுயாதீன இசைக் கலைஞராக தனது பாடல்களின் மூலம் தமிழ் இசை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ஹிப் ஹாப் தமிழா ஆதி, தொடர்ந்து தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக பல ஃபேவரட் பாடல்களை கொடுத்து வருகிறார். மேலும் நடிகராகவும் அடுத்தடுத்து திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

அந்தவகையில் அடுத்ததாக முன்னணி தயாரிப்பு நிறுவனமான சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குனர் அஸ்வின் ராம் இயக்கத்தில் உருவாகும் அன்பறிவு  திரைப்படத்தில் முதல் முறையாக அன்பு-அறிவு என டபுள் ஆக்ஷனில் நடிக்கிறார் ஹிப்ஹாப் ஆதி. முன்னதாக சமீபத்தில் வெளிவந்த ஹிப்ஹாப் ஆதியின் சிவகுமாரின் சபதம் திரைப்படம் இளம் சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

சத்யஜோதி பிலிம்ஸ் மற்றும் ஹிப் ஹாப் ஆதியின் இன்டி ரெபெல்ஸ் இணைந்து தயாரித்த சிவகுமாரின் சபதம் திரைப்படத்தை இசையமைத்து இயக்கி நடித்துள்ளார் ஹிப்பாப் தமிழா ஆதி. ஆதியுடன் இணைந்து மாதுரி ஜெயின் கதாநாயகியாக நடிக்க ஆதித்யா கதிர் பிராண்க்ஸ்டர் ராகுல் VJ.பார்வதி உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

இந்நிலையில் சிவகுமாரின் சபதம் திரைப்படத்திலிருந்து நேசமே பாடலின் வீடியோ தற்போது வெளியானது. ஹிப்ஹாப் தமிழா ஆதியின் இசையில் உருவான எமோஷனலான நேசமே பாடல் வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.