தனது ஸ்டைலான நடனத்தால் பலகோடி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ள சிறந்த நடன இயக்குனரும் நடிகருமான பிரபு தேவா இயக்குனராகவும் பல மெகா ஹிட் பிளாக்பஸ்டர் திரைப்படங்களை கொடுத்துள்ளார். தொடர்ந்து நடிகராக பிரபுதேவா நடித்துள்ள திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளிவர தயாராகி வருகின்றன.

அந்த வகையில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் எழுதி இயக்கியுள்ள சைக்கோ த்ரில்லர் திரைப்படமான பஹீரா திரைப்படமும் இருட்டு அறையில் முரட்டு குத்து பட இயக்குனர் சந்தோஷ்.பி.ஜெயக்குமார் இயக்கத்தில் மாற்றுத்திறனாளியாக வித்தியாசமான கதாபாத்திரத்தில் பிரபு தேவா நடித்துள்ள பொய்க்கால் குதிரை திரைப்படமும் விரைவில் திரைக்கு வர தயாராகி வருகின்றன.

முன்னதாக முதல்முறை காவல்துறை அதிகாரியாக பிரபுதேவா நடித்துள்ள திரைப்படம் பொன் மாணிக்கவேல்.  இயக்குனர் ஏ.சி.முகில் செல்லப்பன் எழுதி இயக்கியுள்ள பொன் மாணிக்கவேல் படத்திற்கு கே.ஜி.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்ய, டி.இமான் இசையமைத்துள்ளார்.
பிரபுதேவாவுடன் இணைந்து நிவேதா பெத்துராஜ் கதாநாயகியாக நடிக்க சுரேஷ் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

நேமிசந்த் ஜபக், வி. ஹிதேஷ் ஜபக் தயாரித்துள்ள பொன் மாணிக்கவேல் திரைப்படம் நேரடியாக டிஸ்னி ப்லஸ் ஹாட்ஸ்டார் OTT தளத்தில் வருகிற நவம்பர் 19ஆம் தேதி ரிலீசாகிறது. இந்நிலையில் இதனை அறிவிக்கும் விதமாக பொன் மாணிக்கவேல் படத்தின் அதிரடியான புதிய ட்ரெய்லர் சற்று முன் வெளியானது. அந்த டிரைலர் இதோ…