பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் இதுவரை நமீதா மாரிமுத்து,நாடியா சாங், அபிஷேக் ராஜா, சின்னபொண்ணு, மற்றும் சுருதி ஆகியோர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் 13 போட்டியாளர்களுடன் பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியின் 6-வது வாரம் அனல் பறக்க நகர்கிறது.

முன்னதாக நடைபெற்ற கேப்டன்சி டாஸ்க்கில் அபிநய் வெற்றி பெற, தனது நாணயத்தை பயன்படுத்தி கேப்டன் பதவியை தட்டிப் பறித்த இசைவாணி எலிமினேஷனுக்கான நாமினேஷனிலிருந்து தன்னை காப்பாற்றிக் கொண்டார். ராஜு, அபிநய், அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, பிரியங்கா, பாவனி, நிரூப், வருண் மற்றும் அக்ஷரா ஆகியோர் எவிக்ஷனுக்கு தேர்வாகியுள்ளனர்.

இதனையடுத்து இந்தவார லக்சரி பட்ஜெட் டாஸ்க்காக நீயும் பொம்மை நானும் பொம்மை ஆரம்பித்தது. ஆரம்பம் முதலே அனல் பறக்க நடைபெற்ற இந்த டாஸ்க்கில் அக்ஷரா, வருண் மற்றும் நிரூப் இடையே காரசாரமான வாக்குவாதங்கள் எழுந்தது. பிரச்சனையின் உள்ளே சிபி செல்ல இன்னும் வாக்குவாதங்கள் அதிகமாக பரபரப்பாக நிறைவடைந்தது நேற்றைய (நவம்பர் 9) நிகழ்ச்சி.

இன்றும் (நவம்பர் 10) பொம்மை டாஸ்க் தொடர்கிறது, இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ வீடியோ சற்று முன் வெளியானது. இதில் இசைவாணி மற்றும் இமான் அண்ணாச்சி நடுவில் விவாதங்கள் எழுகின்றன. அந்த புதிய ப்ரோமோ வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.