புருஷன் போன் செய்து அழைத்த பிறகு, வீட்டிற்கு செல்ல துடித்த கள்ளக் காதலியை அனுப்பாத காதலன், அந்த பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்ற சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 33 வயதான கார்த்தி என்பர், தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இவர், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அடுத்து உள்ள ஒட்டம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 27 வயதான மங்கலட்சுமியை  திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு, மகிழ்ச்சியாக வாழ்ந்த வந்த இந்த தம்பதிக்கு தற்போது 2 குழந்தைகள் உள்ளனர். 

இந்த சூழ்நிலையில், மங்கலட்சுமி, தனக்கு  தாய்மாமன் உறவு முறைகொண்ட 27 வயதான மணிகண்டன் என்ற இளைஞனோடு திருமணத்திற்கு முன்பாகவே  பழகி வந்து உள்ளனர். 

இதன் காரணமாக, தாய் மாமன் உறவு முறைகொண்ட மணிகண்டன், அடிக்கடி சென்னை கீழ்பாக்கம் சென்று, தனது முறைபெண்ணை அவரது கணவர் கார்த்தி இல்லாத சமயங்களில் சந்தித்து வந்தார்.

கணவன் இல்லாத இப்படியான சந்திப்பானது, ஒரு கட்டத்தில் மங்கலட்சுமியுடன் கள்ளத் தொடர்பை உண்டாக்கி இருக்கிறது. இதனால், அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர். 

இந்த நிலையில், கடந்த வாரம் தீபாவளிக்கு தனது அம்மா வீட்டுக்கு மங்கலட்சுமி வந்திருக்கிறார். அப்போது, கடந்த 6 ஆம் தேதி மாலை 7 மணி அயளவில் அந்த பெண்ணும், அவரின் கள்ள காதலனும் அங்குள்ள ஒரு தோப்பில் உல்லாசமாக இருந்து உள்ளனர். 

அந்த நேரம் பார்த்து, அந்த  பெண்னின் கணவர் போன் செய்து, சென்னையில் உள்ள வீட்டுக்கு உடனே கிளம்பி வர சொல்லியிருக்கிறார்.

இதனால், அந்த பெண்ணும் அங்கிருந்து சென்னையில் உள்ள தனது கணவர் வீட்டுக்கு கிளம்பியிருக்கிறார். 

அப்போது, அங்கிருந்த அந்த கள்ளக் காதலன், தனது காதலியை அங்கிருந்து அனுப்ப அடம் பிடித்து மறுத்துவிட்டார். மேலும், தன்னுடம் இன்னும் கொஞ்ச நேரம் இருக்க வேண்டும் என்றும், அந்த கள்ளக் காதலன் அடம் பிடிக்கவே, “எனது கணவனுக்கு என்னால் இனி பதில் சொல்ல முடியாது என்றும், லேட் ஆனால் தேவையில்லாமல் எங்களுக்குள் பிரச்சனை வரும்“ என்றும், அந்த பெண் கூறியிருக்கிறார்.

அத்துடன், தனது தரப்பு விளக்கத்தை கூறிவிட்டு, அந்த பெண் தனது காதலனிடமிருந்து விலகி செல்ல முயன்று உள்ளார். 

அப்போது, தனது பேச்சை மீறி செல்லும் காதலி மீது ஆத்திரமடைந்த அந்த கள்ளக் காதலன், தான் வைத்திருந்த கீ செயின் கத்தியால், காதலியின் கழுத்தில் குத்தி உள்ளார். 

இதில், படுகாயம் அடைந்த அந்த பெண், சத்தம் போட்டு உதவிக்கு ஆட்களை அழைத்து உள்ளார். இதனையடுத்து. அந்த காதலன் அங்கிருந்து தப்பி ஓடிய நிலையில், அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் அந்த பெண்ணை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அந்த பெண்ணுக்கு மருத்துவமனையில் தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், தலைமறைவான அந்த கள்ளக் காதலனை வலை வீசி தீவிரமாக தேடி வருகிறார்கள். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.