பாகுபலி என்ற பிரம்மாண்ட படைப்புக்குப் பின் இயக்குனர் S.S.ராஜமௌலியின் இயக்கத்தில் அடுத்த பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது RRR. DVV என்டர்டெயின்மென்ட் சார்பில் DVV.தனயா தயாரிக்கும் RRR திரைப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் பெண் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் வெளியிடுகின்றன.

தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகர்களான ஜூனியர் என்டிஆர் & ராம்சரண் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, பாலிவுட் நடிகை ஆலியா பட் கதாநாயகியாக நடிதுதுள்ளார் மேலும் அஜய் தேவ்கன் , சமுத்திரகனி, ஸ்ரேயா சரண் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

RRR படத்திற்கு பிரபல ஒளிப்பதிவாளர் KK.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்ய, இசையமைப்பாளர் M.M.கீரவாணி இசையமைத்துள்ளார். முன்னதாக வெளிவந்த RRR திரைப்படத்தின் RRR-GLIMPSE வீடியோ ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் படத்தின் 2-வது பாடலாக நாட்டுக்கூத்து பாடல் இன்று வெளியானது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் வெளியாகவுள்ள RRR படத்தில் மதன் கார்க்கியின் வரிகளில் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆரின் துள்ளலான நடனத்தில் உருவாகியுள்ள நாட்டுக்கூத்து பாடல் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. அதிரடியான நாட்டுக்கூத்து பாடலை கீழே உள்ள லிங்கில் காணுங்கள்.