நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

rajinikanth

தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் ரஜினிகாந்த் தென்னிந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாராக திகழ்கிறார். கடந்த 40 வருடங்களாக தமிழ் சினிமாவின் முன்னனி கதாநாயகனாக  இருக்கும் ரஜினிகாந்த், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், தெலுங்கு ஆங்கிலம் என 160-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். அவர் நடித்து சமீபத்தில் வெளியான 'அண்ணாத்த' படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் கடந்த 40 ஆண்டுகளாக தமிழ் சினிமாவின் வசூல் மன்னனாக கலக்கி வருகிறார் ரஜினிகாந்த். 100 கோடி கிளப், மெகா பிளாக்பஸ்டர், அதிக வசூல் ஈட்டிய தமிழ் சினிமா என மற்ற நடிகர்கள் போட்டி போட்டுக் கொள்ள விதை விதைத்ததே இந்த படையப்பா போட்ட தனி வழி தான் காரணம் ரசிகர்கள் தெரிவிக்கிறாரகள்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதனால் சமூக வலைதளங்களில் #HBDSuperstarRajinikanth என்ற ஹேஷ்டேக்கை ரசிகர்கள் டிரெண்டாக்கி வருகின்றனர். அவருக்கு நடிகர்கள், இயக்குநர்கள் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவருக்கு டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பதிவில் உள்ளார்ந்த அன்புடன் பழகிடும் இனிய நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்குப் பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! 72-ஆவது அகவையில் அடியெடுத்து வைக்கும் அவர், இன்னும் பல ஆண்டுகள் தமிழ் மக்களைத் தன்னிகரற்ற தனது திரையாளுமையால் மகிழ்விக்கவும், நல்ல உடல்நலத்துடன் திகழவும் விழைகிறேன் என்று ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்தார்.

இதே போல தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட வாழ்த்து பதிவில், இன்று பிறந்தநாள் கொண்டாடும் தாதாசாகெப் பால்கே, சூப்பர் ஸ்டார் ஸ்ரீ. @rajinikanth அவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். அவரைத்தொடர்ந்து தயாரிப்பாளர் கலைபுலிதாணு ரஜினிக்கு வலது தெரிவிக்கும் விதமாக ரஜினியின் காமன் டிபி வைத்து ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதனைத்தொடர்ந்து பில்லா, முத்து, சிவாஜி, எந்திரன், பேட்ட என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த மெகா பிளாக்பஸ்டர் படங்களின் தொகுப்போடு ஒரு பிறந்தநாள் காமன் டிபியும் எப்பவுமே கோலிவுட்டின் பாட்ஷா ரஜினிகாந்த் தான் என படு மாஸான எடிட் உடன் ஒரு காமன் டிபியும் என இரண்டு ஸ்பெஷல் காமன் டிபிக்களை நடிகை சாக்‌ஷி அகர்வால் உள்ளிட்ட பிரபலங்கள் வெளியிட்டு வாழ்த்து கூறி வருகின்றனர்.

மேலும் இந்திய சினிமாவின் இணையற்ற சூப்பர் ஸ்டாராக பாலிவுட் நட்சத்திரங்களே கொண்டாடும் வகையில் அனைவரையும் அதிசயிக்க வைத்து வரும் நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு #HBDSuperstarRajinikanth உள்ளிட்ட ஹாஷ்டேக்குகளை போட்டு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் சமூகவலைத்தளங்களில் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.