தமிழ் சினிமாவின் தன்னிகரற்ற நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் தனுஷ்.ஒவ்வொரு படத்திலும் ஏதேனும் ஒன்றை ட்ரை செய்து தமிழ் சினிமாவை வேற லெவெலிற்கு எடுத்து செல்லும் சில நடிகர்களில் ஒருவராக தனுஷ் இருக்கிறார்.இவரது நடிப்பில் கர்ணன் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இதனை தொடர்ந்து தனுஷ் மாறன்,அத்ராங்கி ரே,ராட்சசன் இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் ஒரு படம்,தி கிரே மேன்,செல்வராகவன் இயக்கத்தில் வி க்ரியேஷன் தயாரிப்பில் நானே வருவேன்,வெற்றிமாறனுடன் ஒரு படம்,சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் திருச்சிற்றம்பலம்,ஆயிரத்தில் ஒருவன் 2,சேகர் கம்முலா இயக்கத்தில் ஒரு படம் என்று ஒரு தனி லிஸ்டே வைத்துள்ளார் தனுஷ்.

தனுஷ் நடிக்கும் நானே வருவேன் படத்தினை வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார்.செல்வராகவன் இந்த படத்தினை இயக்குகிறார்.யுவன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தில் இந்துஜா,யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் தொடங்கியது.இந்த படத்தில் யாமினி யகமூர்த்தி ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்தார்.தவிர்க்கமுடியாத சில காரணங்களால் இந்த படத்தில் இருந்து விலகுவதாக யாமினி தனது சமூகவலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.ஹாலிவுட் படத்தின் ஷூட்டிங்கை முடித்து இந்தியா திரும்பியுள்ள தனுஷ் விரைவில் இந்த பட ஷூட்டிங்கில் இணைவார் என்று எதிர்பார்க்கடப்படுகிறது.