வேற மாரி...வேற மாரி...பீஸ்ட் ஷூட்டிங்கை நிறைவு செய்த தளபதி விஜய் !
By Aravind Selvam | Galatta | December 11, 2021 17:52 PM IST
தமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்திகளில் ஒருவர் தளபதி விஜய்.லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இவர் நடித்த மாஸ்டர் படம் கடந்த பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.கொரோனவை தொடர்ந்து வெளியான மாஸ்டர் படம் வசூலிலும் சாதனை படைத்தது.இதனை தொடர்ந்து தனது 65ஆவது படத்தில் நடித்து வந்தார் விஜய்.
இந்த படத்தினை சன் பிக்சர்ஸ் தயாரிக்கின்றனர்.இந்த படத்தை கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் படங்களின் இயக்குனர் நெல்சன் இயக்குகிறார்,அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்கிறார்.செல்வராகவன்,யோகி பாபு,மலையாள நடிகர் டாம் சாக்கோ,அபர்ணா தாஸ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு Gerogia-வில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது.கொரோனாவால் இந்த படத்தின் படப்பிடிப்பு தடைபட்டது.சில மாதங்களுக்கு முன் சென்னையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
நேற்று படத்தில் நடித்து வந்த சிலர் படத்தின் ஷூட்டிங்கை நிறைவு செய்ததாக அறிவித்தனர்.தற்போது தளபதி விஜய் அவரது ஷூட்டிங்கை நிறைவு செய்துள்ளார் என்பதை படக்குழுவினர் ஒரு புகைப்படத்துடன் தெரிவித்துள்ளனர்.படத்தின் அடுத்தகட்ட அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Here’s a special moment from Thalapathy @actorvijay’s last day of shoot for #Beast with director @Nelsondilpkumar@hegdepooja @anirudhofficial @manojdft @nirmalcuts @anbariv #BeastShootWrap pic.twitter.com/6f2Tj2a4lE
— Sun Pictures (@sunpictures) December 11, 2021
Ajith Kumar's Valimai gets a new BIG release announcement - Breaking! Check out!
17/12/2021 08:15 PM