18 போட்டியாளர்களுடன் கோலாகலமாக தொடங்கப்பட்ட பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி 70 நாட்களைக் கடந்து பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த முறை பிக்பாஸ் வீட்டின் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக அபிஷேக் ராஜா, நடன இயக்குனர் அமீர் மற்றும் நடிகர் சஞ்சீவ் ஆகியோர் களமிறங்கினர். இதில் அபிஷேக் ராஜா கடந்த வாரம் மீண்டும் மக்களால் Eliminate  செய்யப்பட்டார்.

கடந்த வாரத்திற்கான கேப்டன் தேர்வில் அமீர் வெற்றிபெற பாவனி தனது நாணயத்தின் உதவியால் கேப்டன் பதவியை தட்டிப் பறித்தார். தொடர்ந்து நடைபெற்ற நாமினேஷன் ப்ராசஸில் நிரூப், அமீர், சிபி, தாமரை, அக்ஷரா, இமான் அண்ணாச்சி, அபிநய் இந்த வார எலிமினேஷனுக்கு தேர்வாகினர்.

இதனை அடுத்து கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டின் மாநாடு லக்சரி பட்ஜெட் டாஸ்க் நடைபெற்றது. இதில் போட்டியாளர்கள் மூன்று கட்சிகளாக பிரிந்து அரசியல், பிரச்சாரம், தேர்தல் என கலகலப்பாகவும் காரசாரமான விவாதங்களோடும் நடைபெற்று முடிந்தது. தொடர்ந்து நேற்றைய (டிசம்பர் 11)நிகழ்ச்சியில் உலக நாயகன் கமல்ஹாசன் சிபி எலிமினேஷனிலிருந்து காப்பாற்றப்பட்டதாக அறிவித்தார்.

இந்நிலையில் பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் இந்த வார எலிமினேஷனாக இமான் அண்ணாச்சி பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவதாக அதிகாரபூர்வ தகவல்கள் வெளிவந்துள்ளன. மக்களின் வாக்குகளின் அடிப்படையில் இமான் அண்ணாச்சி இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறார். இன்றைய (டிசம்பர் 12) நிகழ்ச்சியில் இமான் அண்ணாச்சி எலிமினேட் செய்யப்படுவது ஒளிபரப்பாகும்.