பெண் போலீசுன் தகாத உறவில் இருந்த எடுக்கப்பட்ட ஆபாசப் படங்களை “உன் கணவருக்கு அனுப்பி விடுவேன்” என்று, ஆண் போலீஸ்காரர் மிரட்டிய சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் நெல்லை மாவட்டத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

நெல்லை மாவட்டம் நாங்குநேரி காவல் நிலையத்தில் பாண்டி என்பவர், போலீசாக பணி புரித்து வந்தார்.

இவர், கடந்த 2018 ஆம் ஆண்டு கோவையில் பணிபுரியும் போது, திருமணமாகி இரு குழந்தைகளுக்குத் தாயான பெண் போலீஸ் ஒருவருடன் நட்பாகப் பழகி உள்ளார்.

ஆனால், இந்த நட்பு நாளடைவில் அவர்களுக்கு இடையே கள்ளக் காதலாக மாறியிருக்கிறது. இதன் காரணமாக, அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்திருக்கிறார். 

குறிப்பாக, இப்படியாக இவர்கள் உல்லாசமாக இருக்கும் போது, அவர்கள் நெருக்கமாக இருப்பதை அவர்கள் தங்களது செல்போனில் வீடியோவாக எடுத்து வைத்துக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த சூழ்நிலையில் தான், அவர்களுக்குள் திடீரென்று ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அந்த பெண் போலீஸ் பாண்டியுடன் பேசுவதை திடீரென்று நிறுத்திக்கொண்டார்.

ஆனால், அடுத்த சிறிது நாட்களில் ஆண் போலீசான பாண்டி, தனது சொந்த மாவட்டமான நெல்லையில் உள்ள நாங்குநேரி காவல் நிலையத்திற்குப் பணி மாறுதற்குச் சென்று விட்டார். 

அதன் பிறகு, அந்த பெண் போலீஸ் தனது பழைய விசயங்களை மறந்துவிட்டு தனது குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்திருக்கிறார்.

இந்நிலையில் தான், அந்த ஆண் போலீசான பாண்டி, மீண்டும் அந்த பெண் போலீஸ்க்கு போன் செய்து தனது பழைய பழக்கத்தை மீண்டும் புதுப்பிக்க முயன்று இருக்கிறார். 

ஆனால், அந்த பெண் போலீஸ், ஆண் போலீசான பாண்டியைத் துளியும் கண்டுகொள்ளவில்லை. இதனால், கடும் ஆத்திரமடைந்த ஆண் போலீஸ் பாண்டி, பெண் போலீஸ்சுடன் ஏற்கனவே தனிமையில் உல்லாசமாக இருந்ததை “வீடியோவாக எடுத்து வைத்துக்கொண்ட படங்களை சமூக வலைத்தளத்திலும், உன்னுடைய கணவருக்கு அனுப்பி விடுவேன்” என்று, மிரட்டி அவரை பணிய வைக்க முயற்சித்து இருக்கிறார்.

இதனால், கடும் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் போலீசார், இது பற்றி கோவை மாவட்ட சைபர் கிரைமில் புகார் அளித்திருக்கிறார்.

இந்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், பாலியல் ரீதியாகத் துன்புறுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து நாங்குநேரியில் இருந்த காவலர் ஏழனை பாண்டியை அதிரடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதனால், அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.