“எனது குழந்தைகள் உன் மூலமாக பிறக்கும்” என்று கூறி, வெளிநாட்டு மாணவிக்கு காதல் தொல்லை கொடுத்த இந்திய மாணவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இங்கிலாந்து நாட்டில் தான் இப்படி ஒரு பரபரப்பு சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

இங்கிலாந்தில் ஹெட்டிங்டன் நகரில் செயல்பட்டு வரும் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு புரூக்ஸ் பல்கலைகழகத்தில், 22 வயதான சஹீல் பாவ்நானி என்ற இந்திய மாணவர் படித்து வருகிறார்.

இதே பல்கலைகழகத்தில், 26 வயதான இளம் பெண் அங்கு நர்சிங் படித்து வருகிறார். இந்த 26 வயது மாணவியை, 22 வயதான இந்திய மாணவரான சஹீல் பாவ்நானி, பின் தொடர்ந்து தொடர்ச்சியாக காதல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. 

ஆனால், பல நாட்களாக பின் தொடர்ந்து சென்றும், அந்த இளம் பெண், இவரது காதைலை ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. 

ஒரு கட்டத்தில் விரக்தியடைந்த சஹீல் பாவ்நானி, “உன்னை கடத்திக் கொண்டு போய்விடுவேன்” என்று, மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

முக்கியமாக, அந்த நர்சிங் கல்லூரி மாணவியை பயமுறுத்தும் வகையில் 100 பக்கங்கள் கொண்ட கடிதம் ஒன்றையும், அவர் கொடுத்திருக்கிறார்.

அந்த கடிதத்திலும், அந்த மாணவியை மிரட்டும் தொனியில் வார்த்தைகள் இடம் பெற்றிருந்ததாகவும் கூறப்படுகிறது.

குறிப்பாக, அந்த கடிதத்தைத் தொடர்ந்து அந்த மாணவிக்கு அவர் சுமார் 6 நிமிடங்கள் கொண்ட ஒரு வாய்ஸ் மெசேஜையும் அனுப்பி வைத்திருக்கிறார்.

அந்த ஆடியோவில், “உன்னை என் மனைவியாக்கி கொள்ளப் போகிறேன் என்றும், என்னுடைய குழந்தைகள் உன் மூலமாக பிறக்கும் என்றும், உன்னை என்னுடன் வாழ வைப்பேன்” என்றும், அதில் உறுதிப்பட தெரிவித்திருக்கிறார்.

இதனால், இன்னும் பயந்து போன அந்த நர்சிங் மாணவி, அது முதல் தனது வீட்டிலிருந்து தனியாக வெளியே செல்லாமல் வீட்டிலேயே முடங்கிப்போய் உள்ளார்.

ஒரு கட்டத்தில் கடுமையாக பயந்த அந்த மாணவி அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக வழக்கு அங்குள்ள நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, இந்த வழக்கை விசாரித்த ஆக்ஸ்போர்டு கிரவுன் நீதிமன்ற நீதிபதி நைகல் டேலியிடம்,  “மாணவன் பாவ்நானி எனக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுப்பார் என்றும், தனது பயத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

இதனையடுத்து, “அந்த மாணவருக்கு 4 மாத சிறைத் தண்டனையும், 2 வருடங்கள் கல்லூரியில் இருந்து சஸ்பெண்ட் செய்தும் தண்டனை வழங்கி” நீதிபதி உத்தரவிட்டார். 

அத்துடன், “அந்த மாணவர் பாதிக்கப்பட்ட மாணவியை எந்த விதத்திலும் 5 ஆண்டுகள் தொடர்பு கொள்ள அதிரடியாக தடை விதித்து” உத்தரவிட்டது. இந்த வழக்கு, இங்கிலாந்தில் படித்து வரும் சக இந்திய மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.