தமிழின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக திகழ்ந்து வருவது ஏஜிஎஸ் எண்டெர்டைன்மெண்ட்ஸ்.இவர்கள் நாய் சேகர் என்ற படத்தினை அடுத்ததாக தயாரித்துள்ளனர்.இந்த படத்தில் ஹீரோவாக பிரபல காமெடி நடிகர் சதிஷ் நடித்துள்ளார்.

குக் வித் கோமாளி மூலம் பிரபலமான பவித்ரா லக்ஷ்மி இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.கிஷோர் ராஜ்குமார் இந்த படத்தினை இயக்கியுள்ளார்.இந்த படத்தில் பல நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.மேலும் ஒரு நாய் ஒன்று இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளது.

அஜீஸ் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.அனிருத் இந்த படத்தில் ஒரு பாடலுக்கு இசையமைத்துள்ளார்.இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அனிருத் இசையில் உருவாகியுள்ள எடக்கு மடக்கு என்ற பாடலுக்கு சிவகார்த்திகேயன் பாடல் வரிகள் எழுதியுள்ளார்.இந்த பாடல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.செம ரகளையான இந்த பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த பாடலை கீழே உள்ள லிங்கில் காணலாம்