7.2.2021 இன்றைய தினத்திற்கான முதல் 10 முக்கிய நிகழ்வுகள் மற்றும் செய்திகளை தற்போது பார்க்கலாம்..

- பிரதமர் மோடி சுற்றுப்பயணம்

அஸ்ஸாம் மற்றும் மேற்கு வங்காள மாநிலங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்த சுற்றுப்பயணத்தில், பல திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்ட இருக்கிறார். அத்துடன், அவர் இன்று உரையாற்றவும் இருக்கிறார். இதில், முக்கிய தகவல்கள் இடம் பெறும் என்றும், எதிர்பார்க்கப்படுகிறது.

- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரை

முதலமைச்சரும், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி இன்று திருவள்ளூர் மாவட்டத்திற்கு உட்பட்ட காடுவெட்டி, திருவள்ளூர், மீஞ்சூர் உள்ளிட்ட இடங்களில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். 

- 12 ஆம் வகுப்பு மாணவி ஜெயலட்சுமியின் பே லோடு சேலஞ்ச் - 2021

டாக்டர் அப்துல் கலாம் அறக்கட்டளை சார்பில் “பே லோடு சேலஞ்ச் - 2021” நிகழ்ச்சியில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவி ஜெயலட்சுமி உருவாக்கிய செயற்கைகோளானது, இன்று விண்ணில் ஏவப்படுகிறது. இதில், 100 அரசுப் பள்ளி, கல்லூரி மாணவர்கள் தயாரித்த சிறிய  அளவிலான  செயற்கைக்கோள்களும் இன்றைய தினம் விண்ணில் ஏவப்படுகின்றன. 

- பெட்ரோல் - டீசல் விலை நிலவரம்

சென்னையில் விலை மாற்றமின்றி பெட்ரோல் லிட்டர் ரூ. 89.39 காச்சுக்கும், டீசல் லிட்டர் விலை ரூ. 82.33 காசுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

- முள்ளுக்குறிச்சி ஜல்லிக்கட்டு 

நாமக்கல் மாவட்டம் முள்ளுக்குறிச்சியில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது. 

- “மு.க.ஸ்டாலின் மீது வழக்கு தொடர்வேன்” - அமைச்சர் கடம்பூர் ராஜூ 

“திரையரங்கு உரிமையாளர்களுடன் பேரம் பேசியதாக என் மீது பொய்யான குற்றச்சாட்டு சுமத்திய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது வழக்கு தொடர்வேன்” என்று, அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்து உள்ளார். 

- அதிமுக தலைமை அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு

சசிகலா, நாளை சென்னை வருவதையொட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று முதல் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. 

- “தேர்தல் நேரத்தில் விவசாய கடன்களை தள்ளுபடி செய்வது சந்தர்பவாதம்” - கே.எஸ் அழகிரி

“தமிழ்நாடு கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட விவசாய கடன்களை தேர்தல் நேரத்தில் தள்ளுபடி செய்வதாக முதலமைச்சர் கூறியிருப்பது சந்தர்பவாதம்” என்று, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளார். 

- பனையூரில் ரசிகர்களுடன் திடீர் சந்திப்பு நடத்திய நடிகர் விஜய்

சென்னை பனையூர் அலுவலகத்தில் விஜய் தனது ரசிகர்கள்களை திடீரென்று சந்தித்தார். இந்த சந்திப்பானது எதற்காக நடைபெற்றது என்கிற தகவல் இதுவரை வெளியாகவில்லை. பல மாதங்கள் கழித்து விஜயை நேரில் சந்தித்ததினால், அவரது ரசிகர்கள் தற்போது மிகுந்த உற்சாகமடைந்து உள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

- இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் போட்டி

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் 3 ஆம் நாள் ஆட்டம் இன்று நடைபெறுகிறது. இந்த போட்டியில், இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட்டுகளை இழந்து, 555 ரன்களுடன் 3 ஆம் நாள் ஆட்டத்தைத் இன்று தொடர்கிறது.