கல்யாணப் பெண்ணை வளைத்து வளைத்துப் போட்டோ எடுத்த புகைப்படக்காரரை, ஆத்திரமடைந்த மாப்பிள்ளை அடித்து உதைத்த சம்பவம் வைரலாகி வருகிறது.

திருமண விழாக்களில் பெரும்பாலும் நிறைய சுவாரசியமான சம்பவங்கள் நடப்பது உண்டு. அப்படியான ஒரு சுவாரசியமான சம்பவம் தான், இந்த திருமண நிகழ்விலும் அரங்கேறி இருக்கிறது.

அதாவது, வட இந்தியா ஒன்றில் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மணப் பெண்ணும் - மண மகனும் மேடையில் அந்த அலங்கார தோற்றத்தில் அப்படியே நின்று கொண்டு இருக்கிறார்கள். 

அப்போது, அந்த திருமண நிகழ்வைப் புகைப்படம் எடுக்க வந்த புகைப்படக்காரர், அந்த திருமண நிகழ்விற்கு வந்த அனைவரையும் புகைப்படம் எடுத்துக் கொண்டு இருந்தார். 

குறிப்பிட்ட சிறிது நேரத்திற்குப் பிறகு, மணமகள் நின்ற மேடை மீது ஏறிய அவர், மணமக்களைப் புகைப்படம் எடுக்கத் தொடங்கினார்.

அதே நேரத்தில், சிகப்பு நிற உடையில் மணப் பெண் அழகாய் காட்சி அளிக்கவே, அருகில் நிற்கும் மணமகனைத் தள்ளி நிற்கச் சொல்லி விட்டு, மணப் பெண்ணை மட்டும் அவர் புகைப்படம் எடுக்கத் தொடங்கினார். 

அப்போது, போட்டோவுக்காக சரியான போஸ் கிடைக்காமல் ஒரு வழியாக மணப்பெண்ணின் கன்னத்தில் கை வைத்து “இப்படி நில்லுங்கள், அப்படி நில்லுங்கள்” என்று, மணப்பெண்ணுக்கு அவர் சொல்லிக்கொடுத்துக்கொண்டு இருந்தார். வரிசையாக அவர் புகைப்படம் எடுத்துக் கொண்டு இருந்தார்.

இவற்றை எல்லாம் கவனித்துக் கொண்டே இருந்த கல்யாண மாப்பிள்ளை, சிறிது நேரம் பொருத்துப் பொருத்துப் பார்த்து விட்டு, திடீரென்று கடும் கோபப்பட்டு, அருகில் நின்றிருந்த புகைப்படக்காரரை ஓங்கி பளார் என்று கண்ணத்தில் அறைந்து விட்டார். 

இதனைச் சற்றும் எதிர்பார்க்காத அந்த புகைப்படக்காரர், “இங்கே என்ன நடக்கிறது?” என்று, ஒன்றும் புரியாமல் அப்படியே குழப்பமடைகிறார். 

அதே நேரத்தில், கல்யாண மாப்பிள்ளை புகைப்படக்காரரை அடித்த அந்த கணம், அந்த கல்யாண பெண் மண மேடையிலேயே குலுங்கிக் குலுங்கிச் சிரிக்கிறார். 

அவரால், சிரிப்பை அடக்க முடியாமல் தரையில் விழுந்து மீண்டும் சிரிக்கிறார். இதனைப் பார்த்த மணமக்களின் உறவினர்கள், அந்த திருமண நிகழ்விற்கு வந்திருந்தவர்கள் அனைவரும் சிரிப்பதா? சீரியஸ் ஆவதா? என்று தெரியாமல் குழம்பிப் போனார்கள்.

இப்படியான இந்த வீடியோவானது, சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி தற்போது வைரலாகி வருகிறது. அத்துடன், இந்த வீடியோவுக்கு பலரும் தங்களது எதிர்மறையான கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.