பிக் பாஸ் 4 முடிய இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருக்கிறது. அதனால் போட்டி சற்று கடுமையாகவே மாறி இருக்கிறது. இந்த வாரம் போட்டியாளர்களுக்கு டிக்கெட் டு ஃபினாலே பெறுவதற்காக போட்டியாளர்கள் டாஸ்குகளில் மும்முரமாக விளையாடி வருகின்றனர். தற்போது வரை நான்கு டாஸ்குகள் நடைபெற்று முடிந்திருக்கும் நிலையில் அதில் பலவற்றில் ரம்யா நல்ல இடத்தை தான் பெற்று வருகிறார். 

நேற்று நடந்த பாடல் பாடும் டாஸ்கில் அவர் பெரிதாக பாடல் பாடவில்லை என்றாலும் மற்றவர்களை விட நல்ல இடத்தை பிடித்தார். அந்த டாஸ்க் இறுதியில் ஆரி, சோம் மற்றும் ரம்யா ஆகியோர் ஒரே மதிப்பெண் பெற்றதால் டை ப்ரேக்கர் சுற்று வைக்கப்பட்டது. அப்போது மாஸ்டர் படத்தின் குட்டி ஸ்டோரி பாடல் தான் வந்தது. அதை ரம்யா சரியாக கண்டுபிடித்துவிட்டார்.

இதனால் தளபதி தான் காப்பாத்துனாரு என இறுதியில் ரம்யா கூறினார். மதிப்பெண்கள் அறிவிக்கப்பட்ட பிறகு ரம்யா தான் எதுவும் செய்யாமல் இந்த வாரம் டாஸ்கில் லீடிங்கில் இருக்கிறார் என ரியோ உள்ளிட்ட மற்றவர்கள் கலாய்க்க துவங்கிவிட்டனர். பாலாஜி இந்த பாடல் பாடும் டாஸ்கில் கடைசி இடம் தான் பிடித்தார். அதனால் அவர் கடும் வருத்தத்தில் இருந்தார். 

தேவையில்லாமல் அவர் buzzer ஐ பலமுறை அழுத்தியதால் அவருக்கு அதிக அளவு நெகட்டிவ் மதிப்பெண்கள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது வரை 4 டாஸ்குகள் மட்டுமே வழங்கப்பட்டு உள்ளது, இன்னும் பல வரும், அதனால் வருத்தப்படாதே என ரம்யா பாலாஜிக்கு ஆறுதல் கூறியிருந்தார். 

இன்று வெளியான முதல் ப்ரோமோவில், டிக்கெட் டு ஃபினாலேவின் ஐந்தாம் டாஸ்க் வழங்கப்பட்டது. வளையத்திற்குள் இருக்கும் பந்தை சுற்றிக்கொண்டு நடந்து வர வேண்டும். ஆரம்பத்திலே ரம்யா, சோம், ஆரி, கேபி ஆகியோர் அவுட்டாக.. பாலாஜி மற்றும் ரியோ சிறப்பாக விளையாடி வந்தனர். இறுதியில் பாலாஜியும் அவுட் ஆக, ரியோ அசத்தலாக விளையாடி வெற்றி பெற்றார். இதனால் ரியோவின் மதிப்பெண்கள் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.