இளம் பெண்ணை நிச்சயம் செய்து உல்லாசமாக வாழ்ந்து விட்டு, கல்யாணத்திற்கு மறுத்த மாப்பிள்ளையை பொது மக்கள் சேர்ந்து அடித்தே கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

குஜராத் மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

குஜராத் மாநிலம் வல்சாத் என்னும் இடத்தில் 20 வயதான சஞ்சய் புஸ்ரா என்ற இளைஞர், தனது குடும்பத்துடன் வசித்து வந்தார்.

இந்த சூழலில் தான், 20 வயதான சஞ்சய் புஸ்ரா என்ற இளைஞருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஒரு இளம் பெண்ணுக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்ய இரு வீட்டு பெரியோர்களால் முடிவு செய்யப்பட்டு, அதன் தொடர்ச்சியாக, அவர்களுக்கு திருமண நிச்சயதார்த்தமும் நடைபெற்று இருக்கிறது.

இந்த நிலையில் தான், இந்த ஜோடியின் திருமணம் கொரோனா பொது முடக்கம் உள்ளிட்ட சில காரணங்களாக தொடர்ச்சியாக தள்ளி போய் கொண்டே இருந்தது.

ஆனாலும், திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட இளம் ஜோடிகள் இருவரும், கடந்த ஒரு ஆண்டாக கணவன் - மனைவி போல் லிவ்டூ கெதர் ரிலேஷன்ஷிப்பில் தாலி கட்டிக்கொள்ளாமல் ஒன்றாக ஒரே வீட்டில் உல்லாசமாக வாழ்ந்து வந்திருக்கின்றனர்.

அதன் பிறகு, அந்த பெண்ணின் தந்தை திருமணத்திற்கு ஏற்பாடு செய்த போது, மாப்பிள்ளையான சஞ்சய் திடீரென்று அந்த இளம் பெண்ணை திருமணம் செய்ய மறுத்து விட்டார்.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த பெண்ணின் குடும்பத்தினர் அவரிடம் விளக்கம் கேட்டு உள்ளனர். ஆனால், அவர் சரிவர எந்த பதிலும் சொல்லவில்லை என்று கூறப்படுகிறது.

இதனையடுத்து, அந்த இளம் பெண்ணின் தந்தை அந்த ஊர் பஞ்சாயத்தில் புகார் அளித்திருக்கிறார்.

அதன் தொடர்ச்சியாக, அந்த ஊர் பஞ்சாயத்தில் அந்த இளைஞர் சஞ்சய புஸ்ராவை அழைத்து விசாரித்து உள்ளனர்.

அப்போது, அந்த இளைஞர் ஊர் பஞ்சாயத்திலும் கல்யாணத்திற்கு மறுத்ததால், அந்த ஊர் மக்கள் அவரை மிக கடுமையாக தாக்கி உள்ளனர்.

அதில், அவருக்கு பலமாக அடி பட்டதால், அவர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்று, தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வைரலாக வருகிறது.

இதனைத் தொடர்ந்து இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், இந்த சம்பத்தில் தொடர்புடைய “உத்தம் கவ்லி, லக்ஷ்மன் கவ்லி, ராமன் கவ்லி, சாகன் கவ்லி, சுனில் கவ்லி, மஹ்து கவ்லி மற்றும் சீதாபாய் கவ்லி ஆகியோரை அதிரடியாக கைது செய்து” தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்வம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.