இந்திய திரையுலகில் சிறந்த நடன இயக்குனர், மாஸ் கமர்ஷியல் இயக்குனர், முன்னணி நடிகர் என பன்முகத்தன்மை கொண்ட கலைஞராக தொடர்ந்து மக்களை மகிழ்வித்து வரும் பிரபு தேவா தற்போது, ரெஜினா கெஸன்ட்ராவுடன் இணைந்து நடிக்கும் திரைப்படம் ஃபிளாஷ்பேக். அபிஷேக் பிலிம்ஸ் தயாரிப்பில் டான் சாண்டி ஃபிளாஷ்பேக் படத்தை இயக்குகிறார்.

முன்னதாக இயக்குனர் சந்தோஷ்.பி.ஜெயக்குமார் இயக்கத்தில் மாற்று திறனாளியாக மிரட்டலான கதாபாத்திரத்தில் பிரபுதேவா நடித்த பொய்க்கால் குதிரை மற்றும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பல வித்தியாசமான கெட்டப்புகளில் பிரபு தேவா நடித்துள்ள சைக்கோ த்ரில்லர் திரைப்படமாக உருவாகியிருக்கும் பஹீரா, ஆகிய படங்கள் அடுத்தடுத்து ரிலீசாகவுள்ளன.

மேலும் , பிரபு தேவா நடிப்பில் அதிரடி ஆக்ஷன் படமாக தயாராகியுள்ள கதாபாத்திரத்தில்  தேள் திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வரிசையில் மீண்டும் அபிஷேக் பிலிம்ஸ் தயாரிப்பில் , N.ராகவன் எழுதி இயக்கியுள்ள மை டியர் பூதம் திரைப்படத்தில் பிரபுதேவா நடித்துள்ளார்.

மை டியர் பூதமாக வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் பிரபு தேவாவும் கதாநாயகியாக  ரம்யா நம்பீசனும் இணைந்து நடிக்க, ஃபேண்டசி காமெடி திரைப்படமாக உருவாகியிருக்கும் மை டியர் பூதம் படத்திற்கு D.இமான் இசையமைக்க U.K.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில் மை டியர் பூதம் படத்தின் மாஸ்டர் ஓ மை மாஸ்டர் பாடல் வீடியோ வெளியானது. ஜாலியான அந்த பாடல் வீடியோ இதோ...