17 வயது சிறுமிக்கு மதுபானம் கொடுத்து 3 பேர் சேர்ந்து சிறுமியை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் தான் இப்படி ஒரு கொடூர சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

கர்நாடகா மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு புறநகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட முடிப்பு என்னும் பகுதியில் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பு இருக்கிறது.

இந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் 17 வயது சிறுமி ஒருவர், தனது பெற்றோருடன் வசித்து வருகிறாள். இந்த 17 வயது சிறுமி, அங்குள்ள ஒரு பள்ளியில் படித்து வருகிறார்.

இந்த சூழலில் தான், அந்த 17 வயது சிறுமி பள்ளிக்குச் சென்ற வந்த நிலையில். அந்த பகுதியைச் சேர்ந்த 3 பேர் சேர்ந்து ஒரு அறையில் அடைத்து வைத்து, அந்த 3 பேரும் போதை மருந்து மற்றும் மதுபானத்தை அந்த சிறுமிக்குப் பலவந்தமாகக் கொடுத்திருக்கின்றனர்.

அதன் தொடர்ச்சியாக, அந்த சிறுமியை, அந்த 3 பேரும் சேர்ந்து பலவந்தமாகக் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்திருக்கின்றனர்.

இதனையடுத்து, அந்த சிறுமி வீடு திரும்பிய நிலையில், தனக்கு நேர்ந்த பாலியல் பலாத்காரம் குறித்து அந்த சிறுமி அழுதுகொண்டே கூறியிருக்கிறார். இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய், அங்குள்ள மங்களூரு புறநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். பின்னர், இந்த வழக்கில் கேரளாவை சேர்ந்த ஒரு இளைஞரையும், மங்களூருவைச் சேர்ந்த 2 இளைஞர் என மொத்தம் 3 பேரை போலீசார் அதிரடியாகக் கைது செய்து விசாரணை நடத்தினர்.

அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், இந்த விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.

அதாவது, “பாதிக்கப்பட்ட சிறுமிக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு அங்குள்ள சிலம்பிகுட்டே பகுதியில் வைத்து ஒரு இளைஞர் பாலியல் தொந்தரவு கொடுத்திருக்கிறார்.

இது தொடர்பாக ஏற்கனவே போலீசார் வழக்குப் பதிவு செய்து, அந்த இளைஞரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இது போல் போலீசில் புகார் அளிக்கச் சென்ற நேரத்தில் தான், அந்த சிறுமியின் செல்போன் எண்ணை அங்குள்ள ஒரு போலீஸ் ஏட்டு வாங்கிக்கொண்டு, அவரும் சிறுமியின் செல்போன் எண்ணுக்கு ஆபாசியதுடன், ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்கள் அனுப்பியும் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்திருக்கிறா்.

இது தொடர்பாகவும் போலீசார் வழக்குப் பதிவு செய்து, அந்த போலீஸ் ஏட்டுவை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 

இப்படியாக, “இந்த சிறுமி தொடர்ந்து பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு வருவதால், இந்த சிறுமிக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும்” என்று, மகளிர் போலீசாருக்கு அந்த மாநகர போலீஸ் கமிஷனர் அதிரடியாக உத்தரவிட்டு உள்ளார். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.