தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்கும் அஜித்குமார் நடிப்பில் அடுத்து ரிலீசாக உள்ள திரைப்படம் வலிமை. நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து இயக்குனர் H.வினோத் மற்றும் அஜித் இணைந்துள்ள வலிமை திரைப்படத்தை Zee Studios மற்றும் தயாரிப்பாளர் போனி கபூரின் Bayview projects  இணைந்து தயாரித்துள்ளது. 

மிரட்டலான பைக் ஸ்டன்ட் காட்சிகள் நிறைந்த அதிரடி ஆக்ஷன் படமாக தயாராகியுள்ள வலிமை படத்துக்கு திலீப் சுப்பராயன் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றியுள்ளார் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையில் நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். முன்னதாக வெளிவந்த வலிமை GLIMPSE வீடியோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில் சமீபத்தில் வெளிவந்த வலிமை மேக்கிங் வீடியோ எதிர்பார்ப்புகளை எகிற வைத்துள்ளது.

அடுத்த ஆண்டு (2022) பொங்கல் வெளியீடாக திரைக்கு வரவுள்ள வலிமை திரைப்படத்தில் அஜீத் குமாருடன் இணைந்து பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா மிரட்டாலன வில்லனாக நடிக்க, ஹுமா குரேஷி, யோகிபாபு, மற்றும் விஜய் டிவி புகழ் ஆகியோர் வலிமை திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் தயாரிப்பாளர் போனி கபூர் வலிமை படப்பிடிப்பின்போது அஜித் குமார் உடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, “தைரியமான, பயமற்ற, உண்மையான அர்ப்பணிப்போடு இணைந்து வலிமை படத்தின் உருவாக்கத்திற்காக பயணித்த இந்தப் பயணத்தால் மகிழ்ந்தேன்… இன்னும் பயணம் தொடர எதிர்பார்க்கிறேன்!” என்று தெரிவித்துள்ளார். தயாரிப்பாளர் போனி கபூர் பகிர்ந்த அஜீத்தின் வைரல் புகைப்படம் இதோ…


 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Boney.kapoor (@boney.kapoor)