“தாலி கட்டு” என்று, அடம் பிடித்த விதவை பெண்ணுடன், உல்லாசமாக இருப்பது போல் நடித்து கள்ளக் காதலன் அவரை கொடூரமாக கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

குஜராத் மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

குஜராத் மாநிலம் வதோதராவில் சவ்லி தாலுகாவில் இருக்கும் மஞ்சுசார் குடியிருப்பில் ஷைலேஷ் வகேலா என்ற 35 வயதானவர், தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

இந்த தம்பதிகளுக்கு கால்யாணம் ஆகி 6 ஆண்டுகள் ஆன நிலையில், அந்த வகேலாவுக்கு அதே பகுதியில் வசிக்கும் 32  வயதான ஹன்சா பர்மர் என்ற விதவை பெண்ணுடன் கள்ளக் காதல் ஏற்பட்டு உள்ளது.

இந்த கள்ளக் காதல் காரணமாக, அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர்.

அதன் பிறகு, அந்த விதவை பெண் காதலன் வகேலாவிடம், என்னை திருமணம் செய்துகொள்” என்று, அடிக்கடி சொல்ல ஆரம்பித்தார்.

இதனால், அந்த நபர் “கல்யாணம் செய்து கொள்கிறேன்” என்று கூறி, தொடர்ந்து பல முறை ஏமாற்றி வந்திருக்கிறார்.

இப்படியாக, அந்த பெண் தொடர்ந்து கல்யாண டார்ச்சர் கொடுத்து வந்ததால், ஒரு கட்டத்தில் கடும் ஆத்திரமடைந்த கள்ளக் காதலன் வகேலா, யோசித்த நிலையில் கடந்த வாரம் அந்த பெண்ணை தனியாக ஒரு இடத்திற்கு வரச் சொல்லியிருக்கிறார். 

அதன்படியே, அந்த விதவை பெண்ணும் அந்த இடத்திற்கு தனியாகவே வந்த நிலையில், அந்த பெண்ணுடன் ஜாலியாக இருப்பது போல் அதாவது உல்லாசமாக இருப்பது போல் நடித்து, அவரை கத்தியால் கொடூரமான முறையில் குத்தி கொலை செய்து உள்ளார். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த அந்த பெண், அங்கேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனையடுத்து, அந்த விதவை பெண்ணின் உடலை அங்கயே வீசி விட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

இதனைடுத்து, அடுத்த 2 நாட்களுக்குப் பிறகு போலீசுக்கு தகவல் தெரிந்த நிலையில், அங்கு விரைந்து சென்ற போலீசார், அந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்திய நிலையில், அந்த பகுதியில் வசிக்கும் வகேலாவினை அதிரடியாக கைது செய்து விசாரித்தனர். அப்போது, அவர் அந்த பெண்ணை கொலை செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனையடுத்து, அவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.