இந்திய வரலாற்றில் முதன் முறையாக `பேப்பர்லெஸ்' பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார். மேலும் பட்ஜெட் குறித்து,`Budget like never before' என்று சில வாரங்களுக்கு  முன்பு அவர் தெரிவித்து இருந்த நிலையில், பட்டெஜ் குறித்து பலத்த எதிர்ப்பார்ப்பு அதிகரித்து இருந்தது. 


 மத்திய பட்ஜெட்டின் 2021ன் 10 முக்கிய சிறப்பம்சங்களைக் இங்கே..


1) வருகிற நிதியாண்டில் கல்வித்துறையில் 100 புதிய சைனிக் பள்ளிகள் உருவாக்கப்படும். நாடு முழுவதும் 15,000 பள்ளிகளை மேம்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 


2) ஜவுளித்துறைய ஊக்கப்படுத்த மிகப்பெரிய அளவில் முதலீட்டுப் பூங்கா அமைக்கப்படும். வருகிற 3 ஆண்டுகளில் 7 ஜவுளிப் பூங்காக்கள் அமைக்கப்படும். 


3) கொரோனா தடுப்பூசிக்கு 35,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த ஆண்டில் ஒதுக்கப்பட்டதைவிட இந்த பட்ஜெட்டில் சுகாதாரத் துறைக்கான நிதி அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது. 


4) காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீடு 49 சதவிகிதத்திலிருந்து 74 சதவிகிதமாக அதிகரிப்பு.


5)  தங்கத்துக்கான இறக்குமதி வரி உயர்த்தப்பட்டது. நடப்பு பட்ஜெட்டில் அது 12.5 சதவிகிதத்திலிருந்து 10 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.


6) 2023க்குள் 2 மிகப்பெரிய வர்த்தக வழித்தடங்கள் நிறைவேற்றப்படும்.75 வயதுக்கும் மேற்பட்ட முதியோர்களுக்கு வருமான வரி தாக்கலில் இருந்து விலக்கு. 


7) விவசாயத் துறையில் வேளாண் பொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை நடவடிக்கை தொடரும். வசாயிகளின் நலனில் அரசு உறுதியாக இருப்பதால் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பு ஆகப்படும். 


8)  எல்.ஐ.சி ஐ.பி.ஓ வெளியீட்டுக்கான பணிகள் நடப்பு நிதியாண்டில் தொடங்கப்படும்.  பாரத் பெட்ரோலியம், ஏர் இந்தியா நிறுவனங்களின் பங்குகளை விற்க நடவடிக்கை எடுக்கப்படும். வருகிற நிதி ஆண்டில் பொதுத்துறை நிறுவனப் பங்குகளை விற்பதன் மூலம் 1.75 லட்சம் கோடி ரூபாய் நிதியைத் திரட்ட முடியும். 


9) 3.95 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் மின் விநியோக கட்டமைப்பு மேம்படுத்தப்படும். மின் விநியோகத்தில் தனியார் துறைக்கு அனுமதி வழக்கப்படுகிறது. 100 நகரங்களில் எரிவாயு விநியோகக் குழாய் அமைக்கப்படும். 


10) 75 வயதுக்கும் மேற்பட்ட முதியோர்களுக்கு வருமான வரி தாக்கலில் இருந்து விலக்கு. சென்னை, கொச்சி உள்ளிட்ட 5 மீன்பிடி துறைமுகங்கள் மேம்படுத்தப்படும். அதுமட்டுமல்லாமல் தமிழகத்தில் பல்நோக்கு கடல் பூங்கா நிறுவப்படும்.