நாடாளுமன்றத்தில் 2021-2022ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து வருகிறார். பட்ஜெட் உரை வழக்கம்போல் புத்தக வடிவில் தயாரிக்கப்படாமல் மின்னணு வடிவில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனிடையே வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக காங்கிரஸ் கட்சியின் எம்.பிக்கள் ஜஸ்பீர் சிங், குர்ஜீத் சிங் கறுப்பு நிற உடை அணிந்து வந்திருந்தனர்.


கொரோனா காலத்தில் அறிமுகப்படுத்தப்படும் பட்ஜெட் என்பதால் , கொரோனா காலத்தில் பணியாற்றிய முன்களப்பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்தார், நிர்மலா சீத்தாராமன். மேலும் அவர், ‘’ 2021 ஆம் ஆண்டிலும் கொரோனாவுக்கு எதிரான போராட்டம் தொடங்குகிறது. அதனால் சுகாதாரத் துறைக்கான நிதி ஒதுக்கீட்டில் கொரோனாவுக்கு எதிரான மேலும் 2 தடுப்பூசிகள் விரைவில் நடைமுறைக்கு வரும். இதற்காக மத்திய பட்ஜெட்டில் ரூபாய் 35,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.” என்றார்.