கள்ளக்காதல் ஜோடி வீட்டை விட்டு ஓட்டம் பிடித்த நிலையில், தனியார் விடுதியில் ரூம் போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி 
உள்ளது.

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் மரோட்டிச்சால் பகுதியைச் சேர்ந்த 32 வயதான சஜித் என்பவர், அதே பகுதியில் வசித்து வரும் தனது உறவினரான பானூஷ் என்பவரின் மனைவி 33 வயதான அனிதா என்பவருடன் நேற்றைய தினம் அங்குள்ள திருச்சூர் அருகே இருக்கும் சாலக்குடியில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர்.

இது தொடர்பாக தங்கும் விடுதியின் நிர்வாகிகள் உடனடியாக அந்த பகுதியில் உள்ள காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். இது குறித்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், இருவருடைய உடலையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும், இருவரது தற்கொலை தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், இது தொடர்பாகத் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில், அனிதாவுக்கும், அவரது உறவினரான சஜித்துடன் கள்ளத் தொடர்பு இருந்தது தெரிய வந்தது.

இந்த கள்ளக் காதல் காரணமாக, தமிழ்நாட்டைச் சேர்ந்த அனிதா, தனது கள்ளக் காதலனை சஜித்தை தேடி கேரளா வந்துவிட்டார். இங்கு, வந்ததும் அவர்கள் இருவரும் சேர்ந்து பேசி முடிவு செய்து, இருவரும் ஜோடியாக இந்த லாட்ஜில் தற்கொலை செய்து கொண்டது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. இது தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால், அந்த பகுதியில் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டது.

அதே போல், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே தனியார் அலுவலக கழிவறையில் சிசிடிவி கேமரா வைத்து பெண்களை படம் பிடித்த, தனியார் நிறுவன உரிமையாளரை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். 

நாகர்கோவில் அருகே உள்ள பள்ளிவிளை பகுதியைச் சேர்ந்த 29 வயதான சஞ்சு, கடந்த சில வாரங்களுக்கு முன்பு அங்குள்ள செட்டிகுளம் பகுதியில் “z3 
இன்போடெக்” என்ற மென்பொருள் நிறுவனத்தைத் தொடங்கி நடத்தி வந்தார். அந்த நிறுவனத்தில் 3 பெண்களை அவர் வேலைக்கும் அமர்த்தினார். 

இதனையடுத்து, அந்த நிறுவனத்தின் உள்ள கழிவறையில் சிசிடிவி கேமரா பொருத்தும் பணிகளை சஞ்சு செய்து வந்து உள்ளார். 

இதனை பார்த்து கடும் அதிர்ச்சியடைந்த அந்த நிறுவனத்தின் பெண்கள், அவரிடம் இதற்கான விளக்கத்தைக் கேட்டு உள்ளனர். அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதைத் தொடர்ந்து, அந்த பெண்கள் அங்குள்ள கோட்டார் காவல் நிலையத்திற்குப் புகார் அளித்தனர். 

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், சம்பவ இடத்திற்குச் சென்று, சஞ்சுவை கைது செய்தனர். அதன் தொடர்ச்சியாக, அவர் கழிவறையில் பொருத்திய சிசிடிவி கேமரா, லேப்டாப் உள்ளிட்ட பொருள்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.