தமிழ் திரையுலகில் எந்த ரோலாக இருந்தாலும் அதில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்துபவர் நடிகர் மஹத். மங்காத்தா மற்றும் ஜில்லா போன்ற படங்களில் தனது அசத்தலான நடிப்பில் ஈர்த்திருப்பார். பிக்பாஸ் சீசனில் கலந்து கொண்டு உலகளவில் பிரபலமானார். சென்னை 28 - 2, வந்தா ராஜாவாதான் வருவேன் போன்ற படங்களிலும் நடித்திருந்தார். 

சிம்புவின் நெருங்கிய நண்பரான மகத் ராகவேந்திரா மாடலும், தொழில் அதிபருமான பிராச்சி மிஸ்ராவை காதலித்து வந்தார். இதையடுத்து இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 1ம் தேதி சென்னையில் வைத்து பிராச்சியை திருமணம் செய்து கொண்டார் மகத்.

அந்த திருமண விழாவில் சிம்பு, அனிருத் உள்ளிட்ட ஒரு சில நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். திருமணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின. திருமணம் முடிந்த கையோடு கொரோனா வைரஸ் பிரச்சனையால் லாக்டவுன் அமலுக்கு வந்தது. 

லாக்டவுன் முடிந்த பிறகு பிராச்சி வெளிநாட்டுக்கு கிளம்பினார். மகத்தும், பிராச்சியும் இன்று தங்களின் முதலாவது திருமண நாளை கொண்டாடுகிறார்கள். இந்நிலையில் பிராச்சி கர்ப்பமாக இருக்கும் நல்ல செய்தியை புகைப்படத்துடன் சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார் மகத். மே மாதம் தங்கள் வீட்டில் புது வரவு இருக்கும் என்றும், சிறந்த பரிசு கொடுப்பதற்காக பிராச்சிக்கு நன்றி என்றும் தெரிவித்துள்ளார் மகத்.

கெரியரை பொறுத்த வரை பிக் பாஸ் 2 பிரபலம் ஐஸ்வர்யா தத்தாவுடன் சேர்ந்து கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா படத்தில் நடித்துள்ளார் மகத். புதுமுகம் பிரபுராம் இயக்கியுள்ள அந்த படத்தில் யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் சைக்கிள் என்கிற தெலுங்கு படத்திலும் நடிக்கிறார்.