இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். இதை தொடர்ந்து கடந்த 2017 டிசம்பர் 11-ம் தேதி இவர்கள் திருமணம் இத்தாலியில் விமரிசையாக நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகும் அனுஷ்கா ஷர்மா திரைப்படங்களில் நடித்து வந்தார். 

இந்நிலையில் விராட் கோலியின் மனைவி அனுஷ்கா ஷர்மா லாக்டவுனில் கர்ப்பமாக இருப்பதை அறிவித்தார். அவர்களின் முதல் குழந்தை இந்த வருடம் ஜனவரியில் வரவேற்க உள்ளதாகாவும் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், தனக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக விராட் கோலி ட்விட்டரில் தெரிவித்தார். 

கோலி தனது ட்விட்டர் பக்கத்தில், எங்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது என்பதை தெரிவிப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். உங்களின் வாழ்த்துகள் மற்றும் பிரார்த்தனைகளுக்கு மிகவும் நன்றி. அனுஷ்கா மற்றும் குழந்தை இருவரும் ஆரோக்கியமாக உள்ளனர். எங்கள் வாழ்க்கையில் புதிய அத்தியாத்தை தொடங்கி உள்ளோம் என்றார்.

அதனைத் தொடர்ந்து தற்போது விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மா தங்கள் குழந்தையை கையில் வைத்திருக்கும்  ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளனர். குழந்தைக்கு வமிகா என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. தங்களது குழந்தை தங்களை அடுத்த கட்டத்திற்கு அழைத்து சென்றுள்ளதாகவும், தூக்கம் குறைந்தாலும் தங்களது இதயங்கள் நிறைந்துள்ளதாகவும் அனுஷ்கா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் பாராட்டிய அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார்.

அனுஷ்கா ஷர்மா கடைசியாக பாதல் லோக் மற்றும் புல்புல் போன்ற வெப் சீரிஸில் நடித்தார். விரைவில் அனுஷ்கா ஷர்மா படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.