ஜனவரி மாதம் 7ம் தேதி திருச்சி மாவட்டத்தில், நடைப்பெற்ற கூட்டத்தில் பங்கேற்று பேசிய திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், ‘பொள்ளாச்சி பாலியல் வழக்கில் துணைச் சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனையும், அவரது மகனையும் தொடர்புபடுத்தி பேசி இருந்தார். 


இதனால், பொள்ளாச்சி விவகாரத்தில் தன்னை தொடர்புபடுத்தி பேசியது, தன்னுடைய புகழுக்கும் பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தி உள்ளதாகவும் அதனால் உதயநிதியிடம் ஒரு கோடியே ஓராயிரம் ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டும், பொள்ளாச்சி விவகாரத்தில் தன்னை தொடர்புபடுத்தி பேசிய உதயநிதி ஸ்டாலினுக்கு தடை விதிக்க உத்தரவிடக் கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் வழக்கு தொடர்ந்திருந்தார்.


அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதி, பொதுவெளியில் ஆதாரமின்றி அவதூறு கருத்துக்களை உதயநிதி ஸ்டாலின் ஏன் பேசிகிறார் என்று கேட்ட நீதிபதி மேலும் இந்த வழக்கு அடுத்த முறை விசாரணைக்கு வரும் வரை, இதுபோன்ற கருத்துகளை பொதுவெளியில் பேச மாட்டேன் என உதயநிதி சார்பில் உத்தரவாதம் அளிக்க அவரது வழக்கறிஞருக்கு உத்தரவிட்டார். மேலும் உதயநிதிக்கு அறிவுரை வழங்குமாறு தெரிவித்தார். மேலும் இந்த வழக்கில் உதயநிதி பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் அளித்ததோடு, விசாரணையை மார்ச் மாதம் 4ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார் .