ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வெளியான சமையல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் தான் ஃபரினா. நிகழ்ச்சி தொகுப்பாளரான இவர் அழகு என்ற தொலைக்காட்சி தொடரின் மூலம் சின்னத்திரைக்குள் அடியெடுத்து வைத்தார். தொடர்ந்து கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தறி என்ற தொடரிலும் நடித்துள்ளார். 

விஜய் டிவியில் ஒளிபரப்பான மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சி மூலம் விஐய் தொலைக்காட்சியில் அறிமுகமானார். விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிரபலமான தொலைக்காட்சி தொடர் பாரதி கண்ணம்மாவில் வில்லியாக நடித்து வருகிறார். இளம் வயது பெண்ணாக இருந்தாலும் வில்லி ரோலில் எப்படி என்பதை நன்கு புரிந்து கொண்டு நடித்து வருவதால் இவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கும் என பலரும் கூறிக்கொண்டு வருகின்றனர்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்பொழுதும் உரையாடுவதை வழக்கமாக வைத்துள்ளார் ஃபரீனா. இந்த நிலையில் ரசிகர் ஒருவர் நீங்கள் புகழை திருமணம் செய்துகொள்ளுங்கள் என்று கமெண்ட் செய்துள்ளார். இதை பார்த்த புகழ், என்ன ஃபரினா மக்கள் ஆசைப்படுறாங்க...யோசிச்சு சொல்லு என்று ஃபரினாவை டேக் செய்துள்ளார். இதை பார்த்த ஃபரினா, கொய்யாக்கா... எத்தனை பேர கல்யாணம் பண்ணுவ என்று பதிலளித்துள்ளார். 

எதார்த்தமான நகைச்சுவை உணர்வால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தவர் தொலைக்காட்சி பிரபலம் புகழ். தன்னைத்தானே தாழ்த்திக் கொண்டு அனைவரையும் சிரிக்க வைக்கும் இவரது பேச்சு ரசிகர்களுக்கு ஃபேவரைட். பல்வேறு நிகழ்ச்சிகளில் இவர் தோன்றியிருந்தாலும் சமீபத்தில் வெளியான குக் வித் கோமாளி நிகழ்ச்சி இவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் முதல் சீசனில், ரம்யா பாண்டியன் உடன் இவர் அடித்த காமெடி கூத்து யாரையும் காயப்படுத்தாமல் அனைவரையும் ரசிக்க வைத்த நிலையில் இப்போது இரண்டாம் சீசனில் ஸ்கோர் செய்து வருகிறார். 

தல அஜித் நடிக்க H.வினோத் இயக்கி வரும் வலிமை படத்தில் முக்கிய ரோலில் புகழ் நடிப்பதாக செய்திகள் வெளியாகி வருவதை காண முடிகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.