இளைஞர்களுக்கு பிடித்த இயக்குனரான எஸ்.ஜே. சூர்யா தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். ஹீரோ, ஆன்ட்டி ஹீரோ என கலக்கி வருகிறார். இந்நிலையில் முத்தின கத்தரிக்காய் இயக்குனர் வெங்கட் ராகவன் இயக்கத்தில் கடமையை செய் என்ற படத்தில் நடிக்கிறார் எஸ்ஜே சூர்யா. இத்திரைப்படத்தை நஹார் பிலிம்ஸ் மற்றும் கணேஷ் எண்டர்டெயின்மென்ட் என்ற பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.

எஸ்.ஜே.சூர்யா ஹீரோவாகவும் அவருக்கு ஜோடியாக யாஷிகா ஆனந்தும் நடிக்கும் இத்திரைப்படத்தில் மொட்ட ராஜேந்திரன், சார்லஸ் வினோத், வின்சென்ட் அசோகன், ராஜசிம்மன், சேசு ஆகியோர் நடிக்கிறார்கள். சுந்தர்.சி தயாரித்து நாயகனாக நடித்த முத்தின கத்திரிக்கா என்ற படத்தை இயக்கிய வேங்கட் ராகவன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இந்தப் படத்தை இயக்குகிறார். வினோத் ரத்னசாமி ஒளிப்பதிவு செய்ய, அருண் ராஜ் இசையமைக்கிறார்.

கடமையை செய் படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியது. தமிழ்நாடு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். படப்பிடிப்பு ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. எஸ்ஜே சூர்யா கடைசியாக 2019ஆம் ஆண்டு வெளியான மான்ஸ்டர் படத்தில் நடித்திருந்தார். 

இதேபோல் யாஷிகா ஆனந்த், நயன்தாரா நடிப்பில் வெளியான மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் நடித்திருந்தா. மகத்துடன் இவன்தான் உத்தமன் என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் பிக்பாஸ் புகழ் ஆரவ் நடிக்கும் ராஜ பீமா படத்தில் கேமியோ அப்பியரன்ஸ் கொடுத்துள்ளார்.

நடிகர் எஸ்.ஜே.சூர்யா தற்போது சிலம்பரசன் நடிக்கும் மாநாடு படத்தில் நடித்து வருகிறார். வெங்கட் பிரபு இயக்கி வரும் இந்த படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். அதைத் தொடர்ந்து ராதா மோகன் இயக்கத்தில் உருவான பொம்மை படத்தில் நடித்துள்ளார்.