“வங்கி ATM களில் இனி வாடிக்கையாளர்கள் இலவச பரிவர்த்தனை வரம்புகளை தாண்டி பணம் எடுத்தால், அவர்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்கப்படுவதாக” அறிவிக்கப்பட்டு உள்ளது.

2022 ஆம் ஆண்டு புது வருடம் பிறந்துள்ளது. புத்தாண்டை முன்னிட்டு பொது மக்கள் யாவரும் புத்தாடை உடுத்தி உற்சாகமாக கொண்டாடி வரும் வேளையில், பல தயாரிப்பு நிறுவனங்களுக்கும் தங்களது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்து உள்ளன.

ஆனால், வங்கிகளோ, “இலவச பரிவர்த்தனை வரம்புகளை தாண்டி ATM களில் பணம் எடுத்தால், அந்த  வாடிக்கையாளர்களிடம் இருந்து இனி கட்டணம் வசூலிக்கப்படும்” என்று அறிவித்து உள்ளது.

அதாவது, “இன்று முதல் வங்கி ஏடிஎம் பண பரிமாற்றத்திற்கு 21 ரூபாய் வரி கட்டணம் வசூலிக்கப்படும்” என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதுவும், “இலவச ஏடிஎம் பயன்பாட்டை தாண்டி பயன்படுத்தும் ஏடிஎம் பண பரிமாற்றத்திற்கு மட்டுமே இந்த 21 ரூபாய் கட்டணம் விதிக்கப்பட்டு உள்ளதாகவும்” வங்கிகள் விளக்கம் அளித்து உள்ளன.

அதன்படி, தனியார் துறை வங்கியான ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஆக்சிஸ் வங்கி உள்ளிட்ட வங்கிகளும் இந்த கட்டண உயர்வை அறிவித்து இருக்கின்றன.

அதன்படி, “இன்று ஜனவரி 1, 2022 முதல் இந்த புதிய விதிமுறைகள் அமலுக்கு வருகின்றன. 

அதே போல், பல்வேறு வங்கிகளில் ஏடிஎம் பரிவர்த்தனைக் கட்டணங்கள் வெவ்வேறு முறையில் இருக்கும்” என்றும், குறிப்பிட்டு உள்ளன. 

ஆதலால், “வாடிக்கையாளர்கள் இலவச பரிவர்த்தனை வரம்புகளின் கீழ் பணம் எடுத்தால், இந்த கட்டணத்தில் இருந்து இனி தப்பிக்கலாம்” என்றும், தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதே போல், “தற்போது நடைமுறையில் உள்ள இலவச நடைமுறைகளில் எவ்விதமான மாற்றமும் இல்லை என்றும், அனைத்து வங்கி வாடிக்கையாளர்களுக்கும் தங்களது சொந்த வங்கி ஏடிஎம்களில் மாதம் 5 முறை இலவச ஏடிஎம் சேவை வழங்கப்படும்” என்றும், தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், “பெரு நகரங்களில் இருக்கும் மற்ற வங்கி ஏடிஎம்களில் 3 இலவச பரிமாற்றங்களும், பெரு நகரங்கள் அல்லாத பிற வங்கி ஏடிஎம்களில் 5 முறையும் இலவசமாகப் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்றும், இவை வங்கியால் வாடிக்கையாளர்கலுக்கு வழங்கப்படும் ஏடிஎம் சலுகை” என்றும், தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இப்படியாக, “வங்கிகள் வழங்கும் இந்த சலுகைகளை தாண்டும் போது தான், அவர்களிடம் இருந்து 21 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்” என்றும், விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.