“விவசாயிகள் எனக்காகவா உயிரிழந்தார்கள் என்று பிரதமர் மோடி என்னிடம் கேட்டார்” என்று, மேகாலயா ஆளுநர் சத்ய பால் மாலிக் புதிய சர்ச்சையை கிளப்பியிருப்பது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாஜக தலைமையிலான மத்திய அரசு கடந்த ஆண்டு புதிதாகக் கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லையில் விவசாயிகள், தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அதாவது, கடந்த ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி தொடங்கிய விவசாயிகளின்  மாபெரும் போராட்டமானது, ஒரு ஆண்டை நிறைவு செய்ய சில நாட்கள் இருந்த நிலையில் “3 வேளாண் சட்டங்களையும் திரும்ப பெறுவதாக” பிரதமர் மோடி, அறிவித்ததால் விவசாயிகள் இந்த போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

எனினும், விவசாயிகளின் இந்த போராட்டமானது, நாடே திரும்பிப் பார்க்கும் வகையிலான ஒரு மாபெரும் போராட்டமாக இது மாறியது. அத்துடன், பல உலக தலைவர்களின் கவனத்தையும் இந்த போராட்டம் தன் பக்கம் ஈர்த்தது. 

இந்த போராட்டத்தில் விவசாயிகளுக்கு வெற்றியே கிடைத்தது என்றாலும், கடந்த ஒரு வருட காலமாக நடைபெற்ற இந்த போராட்டத்தில் 700 க்கும் அதிமான விவசாயிகள் உயிரிழந்தார்கள் என்றும் கூறப்படுகிறது. இது தொடர்பாக, நாடாளுமன்றத்தில் அனைத்து எதிர்கட்சிககளும் தொடர்நது கேள்வி எழுப்பி வந்ததால், கடந்த காலங்களில் நாடாளுமன்றம் முற்றிலுமாக முடங்கிப் போனது.

இந்த சூழலில் தான், மேகலாய ஆளுநர் சத்தியபால் மாலிக் சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசியிருக்கிறார்.

இந்த சந்திப்பின்போது, தனக்கு ஏற்பட்ட அதிருப்தி குறித்து அவர் சர்ச்சைக்குறிய கருத்துக்களை தெரிவித்திருக்கிறார்.

அதன்படி, “பிரதமர் மோடி மிகவும் திமிரு பிடித்தவர்” என்றும், குறிப்பிட்டு உள்ளார்.

அதாவது, “வெறும் 5 நிமிடம் நடந்த இந்த சந்திப்பு குறித்து, ஹரியானாவில் நடந்த விழாவில் பேசிய ஆளநர் சத்திய பால் மாலிக், “பிரதமர் மோடி மிகவும் திமிர் பிடித்தவர் என்றும், நான் அவரிடம் நம்முடைய 500 விவசாயிகள் உயிரிழந்து உள்ளார்கள் என கூறினேன்” என்றும், குறிப்பிட்டு பேசினார்.

“ஆனால், அதற்கு என்னிடம் பதிலளித்த பிரதமர் மோடி, 'அவர்கள் அனைவரும் எனக்காகவா இறந்தார்கள்?' என்று, என்னிடம் பதில் கேள்வி கேட்டார்” என்றும், தெரிவித்தார்.

“இனதால் நான் கடும் அதிர்ச்சியடைந்து, நீங்கள் தான் இந்தியாவின் பிரதமர்” எனறு கூறினேன்” என்றும், நினைப்படுத்தியதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். 

“இறுதியாக, நான் பிரதமரிடம் இந்த விவகாரம் தொடர்பாக வாக்குவாதம் செய்தேன் என்றும், அதன் பிறகு, அவர் என்னிடம் அமித் ஷாவை சந்திக்குமாறு கூறினார்” என்றும், தெரிவித்தார். 

“இது தொடர்பாக நான் அமித்ஷாவை சந்தித்து பேசிய போது, 'அவர் ஏதோ பேசிவிட்டார் விடுங்கள். தொடர்ந்து என்னை சந்தியுங்கள்' என அமித்ஷா கூறி என்னை சமாதானம் செய்தார்” என்றும், சத்தியபால் மாலிக் பேசினார். 

மேகாலயா ஆளுநர் சத்ய பால் மாலிக் குற்றம்சாட் இணையத்தில் பெரும் வைரலாகி வரும் நிலையில், இதனை எதிர் கட்சிகள் தற்போது கையில் எடுத்து உள்ளது குறிப்பிடத்தக்கது.