பிரபல தொழில் அதிபர் வீட்டில் வருமான வரித்துறை நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் காட்டப்படாத 150 கோடிக்கும் அதிகமான ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

உத்திரப் பிரதேச மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

உத்தரப் பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரான பியூஷ் ஜெயின் என்பவர், அந்த மாநிலத்தில் வாசனை திரவிய உற்பத்தி நிறுவனம் நடத்தி வருகிறார். 

அத்துடன், இந்தியாவில் பிற மாநிலங்களான கான்பூர், மும்பை, குஜராத் உள்ளிட்ட பகுதிகளிலும் வெளி நாடுகளிலும் இவருடைய வாசனை திரவிய நிறுவனத்துக்கு கிளைகளும் உள்ளன. 

அத்துடன், இந்த தொழிலதிபர் பியூஷ் ஜெயின், சமீபத்தில் தான் அந்த மாநிலத்தில் உள்ள கட்சியான சமாஜ்வாதி கட்சி அலுவலகத்தில், சமாஜ்வாதி வாசனை திரவியத்தை அறிமுகம் செய்து வைத்தார். 

முக்கியமாக, இவருக்கு இந்தியா முழுவதும் கிட்டதட்ட 40 நிறுவனங்கள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

அத்துடன், தொழிலதிபர் பியூஷ் ஜெயின், ஜிஎஸ்டி மற்றும் வருமான வரிகளை முறையாக செலுத்தவில்லை என்றும், இவர் மீது குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.

இதன் காரணமாக, அந்த வருமானவரித்துறை அதிகாரிகள், பியூஷ் ஜெயினுக்கு சொந்தமான அனந்தபுரி வீடு மற்றும் அங்குள்ள அலுவலகங்களில் நேற்று திடீரென்று அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர். 

அதன்படி, நடத்தப்பட்ட இந்த அதிரடி சோதனையில், தொழிலதிபர் பியூஷ் ஜெயின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், அள்ள அள்ள குறையாத பணம், பெட்டி பெட்டியாக இருந்ததை கண்டு, சோதனையில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் அனைவரும் அப்படியே கடும் அதிர்ச்சியில் உரைந்து போனார்கள்.

முக்கியமாக, “ஒவ்வொரு நோட்டு கட்டையும், டேப் கொண்டு ஓட்டி மிகவும் பாதுகாப்பான முறையில் இந்த பணங்கள் யாவும் அட்டை பெட்டியில் பாதுகாப்பாகவே வைக்கப் பட்டிருந்தன. 

இவற்றுடன், அந்த வீட்டில் போலியான பில்களும் கண்டுபிடிக்கப்பட்டன. இந்தப் பணத்தை அதிகாரிகள் எண்ணி பார்த்துள்ளனர். 

அதன்படி, கைப்பற்றப்பட்ட மொத்த பணம் 150 கோடி ரூபாய் இருந்தது தெரிய வந்தது. 

இந்த பணத்தை எல்லாம் கைப்பற்றிய அதிகாரிகள், தொழிலதிபர் பியூஷ் ஜெயினிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், தொழிலதிபர் பியூஷ் ஜெயினுக்கு சொந்தமான தொழிற்சாலையில் போலியான இன்வாய்ஸ்கள் மூலம் சரக்குகளை அனுப்ப தயாராக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4 லாரிகளும் தற்போது பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

ஆனால், “பாஜக வேண்டும் என்றே, சமாஜ்வாதி பிரமுகர்களை குறிவைத்து இது போன்ற சோதனைகளை நடத்துவதாக” அந்த கட்சியை சேர்ந்த முக்கிய தலைவர்கள் பகிரங்கமாக குற்றம் சாட்டி உள்ளனர்.

இதனிடையே, தொழில் அதிபர் ஒருவரது வீட்டில் ரொக்கமாக 150 கோடி ரூபாய்க்கு மேல் பணம் ரொக்கமாக பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம், நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

#WATCH | As per Central Board of Indirect Taxes and Customs chairman Vivek Johri, about Rs 150 crores have been seized in the raid, counting still underway.

Visuals from businessman Piyush Jain's residence in Kanpur. pic.twitter.com/u7aBTJhGxW

— ANI (@ANI) December 24, 2021