இந்திய திரை உலகின் மிகச் சிறந்த நடன இயக்குனர்களில் மிகவும் குறிப்பிடப்படும் நடன இயக்குனரான பிருந்தா மாஸ்டர் கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நட்சத்திர நடிகர்களுடனும் இணைந்து பணியாற்றியுள்ளார். சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த அண்ணாத்த திரைப்படத்திலும் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை நடன இயக்குனராக இருந்த பிருந்தா மாஸ்டர் தற்போது இயக்குனராக களமிறங்கியுள்ள திரைப்படம் ஹே சினாமிகா. துல்கர் சல்மான், காஜல் அகர்வால் மற்றும் அதிதி ராவ் ஹைதாரி மூவரும் இணைந்து ஹே சினாமிகா திரைப்படத்தின் முன்னணி கதாபாத்திரங்களாக நடித்துள்ளனர்.

ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் குளோபல் ஒன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள ஹே சினாமிகா திரைப்படத்திற்கு ப்ரீத்தா ஜெயராம் ஒளிப்பதிவு செய்ய, கோவிந் வசந்தா இசையமைத்துள்ளார். வருகிற 2022 பிப்ரவரி 25 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் ஹே சினாமிகா ரிலீசாக உள்ளது.

முன்னதாக சில தினங்களுக்கு முன்பு ஹே சினாமிகா படத்திலிருந்து துல்கர் சல்மானின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில், தற்போது காஜல் அகர்வால் மற்றும் அதிதி ராவ் ஹைதாரி இருவரின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகியுள்ளன. அசத்தலான அந்த போஸ்டர்களை கீழே உள்ள லிங்கில் காணுங்கள் .