இந்திய திரையுலகில் உச்ச நட்சத்திரமாக விளங்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு இந்திய சினிமாவின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான தாதாசாஹேப் பால்கே விருது சமீபத்தில் நடந்த 67-வது தேசிய திரைப்பட விருது விழாவில் வழங்கப்பட்டது. முன்னதாக கடந்த தீபாவளி தினத்தன்று திரையரங்குகளை  திருவிழாவாக மாற்றியது சூப்பர் ஸ்டாரின் அண்ணாத்த திரைப்படம்.

கமர்சியல் இயக்குனர் சிவா இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் அவர்கள் தயாரித்த அண்ணாத்த திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து அண்ணாத்த திரைப்படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, ஜெகபதி பாபு, பிரகாஷ்ராஜ், ரெட்டின் கிங்ஸ்லி, சூரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவாளர் வெற்றியின் ஒளிப்பதிவில், ரூபன் படத்தொகுப்பு செய்துள்ள அண்ணாத்த திரைப்படத்திற்கு தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்துள்ளார்.  குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் குடும்பம் குடும்பமாக திரையரங்குகளில் கொண்டாட சூப்பர் ஹிட்டானது அண்ணாத்த திரைப்படம்.

இந்நிலையில் அண்ணாத்த திரைப்படத்தில் பணியாற்றிய இசையமைப்பாளர் டி.இமான், ஒளிப்பதிவாளர் வெற்றி, படத்தொகுப்பாளர் ரூபன், ஸ்டண்ட் இயக்குனர் திலீப் சுப்பராயன் , இயக்குனர் சிவா உள்ளிட்ட படக்குழுவினரை நேரில் சந்தித்த ரஜினிகாந்த் அனைவருக்கும் தங்கச் சங்கிலி அணிவித்து பாராட்டியுள்ளார். இந்த சந்திப்பின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படங்கள் இதோ…