தமிழ் சினிமாவின் நட்சித்திர நடிகர்களில் ஒருவரான நடிகர் சிலம்பரசன் நடிப்பில் சமீபத்தில் வெளியான மாநாடு திரைப்படம் நாட்களை கடந்தும் ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக ஓடி மெகா ஹிட் ப்ளாக்பஸ்டர் ஆனது. அடுத்ததாக கெளதம் கார்த்திக்குடன் இணைந்து பத்து தல மற்றும் இயக்குனர் கோகுல் இயக்கத்தில் கொரோனா குமார் ஆகிய படங்களில் சிலம்பரசன் நடிக்கிறார் .

இதனிடையே  இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார் சிலம்பரசன். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைக்கிறார் . சிலம்பரசன்-கௌதம் வாசுதேவ் மேனன்-ஏ.ஆர்.ரகுமான் கூட்டணி 3-வது முறையாக இணைந்துள்ளதால் வெந்து தணிந்தது காடு படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி. கே.கணேசன் தயாரித்துள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் சிலம்பரசனுடன் இணைந்து ராதிகா சரத்குமார், கயடு லோஹர், சித்திக் மற்றும் நீரஜ் மாதவ் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். சித்தார்த்தா நுன்னி ஒளிப்பதிவில், ஆன்டனி படத்தொகுப்பு செய்துள்ளார்.

முன்னதாக வெளியான வெந்து தணிந்தது காடு படத்தின் டீசர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில் படப்பிடிப்பும் முழு வீச்சில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வெந்து தணிந்தது காடு பட படப்பிடிப்பு தளத்தில் ஜன்னல் அருகில் அமர்ந்தபடி கெளதம் வாசுதேவ் மேனன் மற்றும் சிலம்பரசனின் புதிய ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களை கெளதம் மேனன் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். வைரலாகும் அந்த புகைப்படங்கள் இதோ…