சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகி சக்கைபோடு போட்டு வரும் திரைப்படம் அண்ணாத்த.சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தினை தயாரித்துள்ளனர்.

நயன்தாரா இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.கீர்த்தி சுரேஷ் இந்த படத்தில் ரஜினியின் தங்கையாக நடித்துள்ளார்.குஷ்பூ,மீனா,ஜெகபதி பாபு,ஆயுஷ்மான் சிங்,பிரகாஷ் ராஜ்,சூரி,சதிஷ் என பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார்.இந்த படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.பெரிய எதிர்பார்ப்புக்கிடையே பிரம்மாண்டமாக உலகமெங்கும் இந்த படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.அண்ணன் தங்கை பாசத்தை மையமாக வைத்து இந்த படம் உருவாகியுள்ளது.

இந்த படத்தின் சூப்பர்ஹிட் ஓப்பனிங் பாடலான அண்ணாத்த அண்ணாத்த பாடல் வீடீயோவை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.மறைந்த பாடகர் எஸ் பி பி ரஜினிக்காக கடைசியாக பாடிய இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் ஹிட் அடித்த நிலையில் இந்த வீடியோவும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த பாடல் வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்