17 வயது சிறுமி ஒருவர் 40 பேர் மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் உச்சக்கட்ட அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி இருக்கிறது.

இந்தியாவில் அதுவும் புதுச்சேரியில் தான் இப்படி ஒரு கொடூர சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

புதுச்சேரியில் உள்ள அண்ணா நகரில் அழகு நிலையம் என்ற பெயரில் விபச்சாரம் நடந்து வருவதாக அந்த பகுதியில் உள்ள போலீசாருக்கு ரகசிய தகவல் வந்துகொண்டே இருந்தது.

இதனையடுத்து, போலீசார் குறிப்பிட்ட அந்த பகுதியில் மாறுவேடத்தில் திடீரென்று அதிரடியான சோதனையில் ஈடுபட்டனர். 

அப்போது, குறிப்பிட்ட அந்த அந்த அழகு நிலையத்தில் விபச்சாரம் நடப்பது உறுதியாகி இருக்கிறது. 

அத்துடன், அழகு நிலையத்தில் நடந்த இந்த அதிரடியான சோதனையில், அழகு நிலைய உரிமையாளர் சுனிதாவை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். 

அதே நேரத்தில், அங்கு விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட பெண்களை மீட்டு போலீசார், அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குறிப்பாக, இந்த சோதனையின் போது அந்த அழகு நிலையத்தில் 17 வயது சிறுமியை போலீசார் மீட்டு உள்ளனர். 

இதன் காரணமாக, போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த விசாரணையின் போது, அந்த 17 வயது சிறுமியை அங்கு வந்த சுமார் 40 பேர் வரை இந்த சிறுமியை பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்து, அவரது வாழ்க்கையையே சீரழித்ததும் தெரிய வந்தது. 

இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த போலீசார், 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பாக சம்மந்தபட்பட 40 பேர் மீதும், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, அவர்கள் தொடர்பாக விசாரணை நடத்தி, அந்த 40 பேரையும் தேடி வருகிறார்கள். 

அத்துடன், “அந்த அழகு நிலையத்திற்கு அந்த சிறுமி வந்தது முதல், தற்போது வரை யார் யார் அங்கு வந்து சென்றார்கள்?” என்பது குறித்தும், தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

அதே போல், “அந்த அழகு நிலையத்திற்கு இந்த 17 வயது சிறுமி எப்படி வந்தார்? இவரை இங்கு கொண்டு வந்து விட்டது யார்?” என்றும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விசாரணை தொடர்பாக, அழகு நிலைய உரிமையாளர் சுனிதாவை போலீஸார் 3 நாள் காவலில் எடுத்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.