மோகன்லாலின் மரக்கார் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!
By Anand S | Galatta | November 12, 2021 13:00 PM IST
மலையாளத் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக திகழும் நடிகர் மோகன்லால் அடுத்ததாக நடிகர் பிரித்திவிராஜ் இயக்கத்தில் உருவாகும் ப்ரோ டாடி திரைப்படத்தில் நடித்து வருகிறார். முன்னதாக மோகன்லால் நடிப்பில் பிரமாண்டமாக ரிலீசாக இருக்கும் திரைப்படம் மரக்கார்-அரபிக்கடலின்டே சிம்ஹம்.
பிரம்மாண்டமான பீரியட் திரைப்படமாக ,முன்னணி இயக்குனர் பிரியதர்ஷன் எழுதி இயக்கியுள்ள மரக்கார்-அரபிக்கடலின்டே சிம்ஹம் திரைப்படத்தை ஆன்டனி பெரும்பாவூர் தயாரித்துள்ளார். ஒளிப்பதிவாளர் திருநாவுக்கரசின் ஒளிப்பதிவில், ரோனி ராஃபெல் பாடல்களுக்கு இசை அமைக்க ராகுல் ராஜ், அங்கிட் சூரி, லைல்எவன்ஸ் ரோடர் ஆகியோர் இணைந்து பின்னணி இசை சேர்த்துள்ளனர்.
மரக்கார்-அரபிக்கடலின்டே சிம்ஹம் படத்தில் குஞ்ஞாலி மரக்கார் IV கதாபாத்திரத்தில் மோகன்லால் நடிக்க, ஆக்சன் கிங் அர்ஜுன், சுனில் ஷெட்டி, பிரபு, மஞ்சுவாரியர், கீர்த்தி சுரேஷ், முகேஷ், நெடுமுடி வேணு, பிரணவ் மோகன்லால், அசோக் செல்வன், சுஹாசினி, கல்யாணி பிரியதர்ஷன், ஹரிஷ் பெரடி நடிக்க பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
முன்னதாக வெளிவந்த மரக்கார்-அரபிக்கடலின்டே சிம்ஹம் திரைப்படத்தின் ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் வருகிற டிசம்பர் 2-ஆம் தேதி திரைப்படம் நேரடியாக உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் என்று மோகன்லால் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.