தோழி கொடுத்த குளிர்பானத்தை குடித்து மயங்கிய இளம் பெண்ணை, தோழியின் ஆண் நண்பர்கள் 4 பேர் சேர்ந்து கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

ஹரியானா மாநிலம் குருகிராம் பகுதியைச் சேர்ந்த 23 வயது இளம் பெண் ஒருவர், தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர், படித்து முடித்துவிட்டு, அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணயாற்றி வருகிறார்.

இப்படியான சூழ்நிலையில், அந்த 23 வயது இளம் பெண், தனது தோழியை பார்ப்பதற்காக, அருகில் உள்ள பக்கத்து மாநிலமான ராஜஸ்தான் சென்றிருக்கிறார்.  

அங்கு, அந்த தோழியின் வீட்டில் அவரது ஆண் நண்பர் ஒருவர் இருந்திருக்கிறார். அப்போது, ஹரியானாவில் இருந்த வந்த இந்த பெண்ணை வரவேற்ற தோழியின் ஆண் நண்பர், இந்த பெண்ணிற்கு குடிக்க குளிர்பானம் கொடுத்திருக்கிறார்.   

தோழி வீடு என்கிற நம்பிக்கையில் இந்த இளம் பெண்ணும், அந்த குளிர்பானத்தை வாங்கி குடித்திருக்கிறார்.  

அந்த குளிர்பானத்தை குடித்த அடுத்த சில நிமிடங்களில் அந்தப் பெண், அப்படியே மயங்கி சுயநினைவு இல்லாமல் அங்கே இருந்த ஷோபாவில் மயங்கி சாய்ந்திருக்கிறார்.

அதாவது, அந்த பெண்ணுக்கு கொடுத்த குளிர்பானத்தில், அந்த ஆண் நண்பர் மதுவை கலந்து கொடுத்திருக்கிறார். இதன் காரணமாக, அந்த மது கலந்து குளிர்பாணத்தை குடித்த சில நிமிடங்களில் அந்த பெண் மயங்கிபோய் இருக்கிறார்.

இதையடுத்து, அந்த ஆண் நண்பர் முன்கூட்டியே திட்டமிட்ட படி, அந்த பெண்ணை அங்குள்ள டவுரா என்ற பகுதிக்கு தூக்கிச் சென்று உள்ளார்.

ஆனால், அந்த இடத்தில் அவருடன் அவருடைய மற்ற 3 நண்பர்களுடன் சேர்ந்து, இந்த இளம் பெண்ணை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து,  நாசம் செய்துள்ளனர். 

இதனையடுத்து, மயக்கம் தெளிந்து அந்த பெண் எழுந்திருக்கையில் தனது நிலை குறித்து பார்தது கடும் அதிர்ச்சியடைந்து, கதறித்து துடித்து உள்ளார்.

இதனால், அந்த இளம் பெண்ணை அந்த வெறிப்பிடித்த கும்பல், மீண்டும் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்கள். அதன் பிறகு, அந்த பெண்ணை அங்கேயே  விட்டு விட்டு, அந்த 4 பேரும், அங்கிருந்து தப்பிச் சென்றிருக்கிறார்கள்.

இதனையடுத்து, அங்கிருந்து நடக்க முடியாமல் நடந்து வந்த அந்த பெண், அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், அந்த பெண்ணின் தோழியை பிடித்து விசாரணை நடத்த முயன்றனர். ஆனால், அவர் தற்போது தலைமறைவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதே நேரத்தில் பாதிக்கப்பட்ட இளம் பெண், அங்குள்ள அரசு மருத்துவமனையில் தற்போது அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

மேலும், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.