விஜய் டிவியின் பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி 5 வாரங்களை கடந்து 6-வது வாரத்தில் கொஞ்சம் பரபரப்பை  எட்டியுள்ளது. இந்த வார தொடக்கத்திலேயே கேப்டன் பதவியை அபிநய் இடமிருந்து தனது நாணயத்தால் கைப்பற்றிய இசைவாணி நாமினேஷனில் இருந்தும் தன்னை காப்பாற்றிக் கொண்டார்.

தொடர்ந்து நடைபெற்ற நீயும் பொம்மை நானும் பொம்மை டாஸ்க்கும் பரபரப்புக்கு பஞ்சம் வைக்காமல் நடந்து முடிந்தது. இதில் நிரூப் வெற்றி பெற்றார். மேலும் இந்த வாரம் பாவனியின் ஆகாயம் நாணயத்தின் வாரம் என்பதால் பிக்பாஸ் வீட்டில் பல அதிகாரங்கள் பாவனிக்கு வழங்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் லிவ்விங் ஏரியா முழுவதும் பாவனியின் கட்டுப்பாட்டில் இருக்க, லிவிங் ஏரியாவுக்குள் நுழைய டாஸ்க் வழங்கப்படுகிறது. விதி மீறி வருபவர்களுக்கு தண்டனை வழங்கப்படுகிறது. ஆனால் நேற்று நிரூப் மற்றும் அக்ஷரா விதிகளை பின்பற்றாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பிறகு தண்டனை அனுபவித்தனர்.

இதனையடுத்து நேற்று பிக்பாஸ் வீட்டில் பிக்பாஸ் விருதுகள் விழா நடைபெற்றது. அதில் சிறந்த போட்டியாளராக நிரூப்பும் சிறந்த எண்டர்டெயினராக ராஜுவும் விருதுகள் பெற்றதோடு நேற்றைய (நவம்பர் 11)  நிகழ்ச்சி நிறைவடைய, இன்றும் விருது விழா தொடர உள்ளது.

இந்நிலையில் இன்றைய (நவம்பர் 12) நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ வீடியோ சற்று முன்பு வெளியானது. அதில் ராஜு Safe Game ஆடுவதாக அபிநய் மற்றும் மதுமிதாவிடம் பாவனி புலம்பும் வீடியோ வெளியானது. அந்த ப்ரோமோ வீடியோ இதோ…