தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் கார்த்திகேயா கதாநாயகனாகவும் வில்லனாகவும் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். RX 100 படத்தின் மூலம் பிரபலமடைந்த கார்த்திகேயா நடிகர் நானி கதாநாயகனாக நடித்த கேங் லீடர் திரைப்படத்தில் மிரட்டலான வில்லனாக அசத்தினார்.

இதனைத் தொடர்ந்து தமிழில் இயக்குனர் வினோத் இயக்கத்தில் தல அஜித்குமார் நடித்து அடுத்த ஆண்டு பொங்கல் வெளியீடாக (2022 ஜனவரி) ரிலீசாகவுள்ள அதிரடி ஆக்சன் திரைப்படமான வலிமை படத்திலும் வில்லனாக கார்த்திகேயா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக கார்த்திகேயா நடிப்பில் தெலுங்கில் நாளை (நவம்பர் 12-ஆம் தேதி) வெளிவரவுள்ள திரைப்படம் ராஜா விக்ரமர்கா. இப்படத்தில் கார்த்திகேயாவுக்கு கதாநாயகியாக தான்யா ரவிச்சந்திரன் நடிக்க, சாய்குமார் பசுபதி, தனிகெல்லா பரணி, ஜெமினி சுரேஷ் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.

88 ராமர் ரெட்டி தயாரிப்பில், இயக்குனர் ஸ்ரீ சரிபள்ளி இயக்கியுள்ள ராஜா விக்ரமர்கா படத்திற்கு பிரசாந்த்.R.விஹாரி இசையமைத்துள்ளார். இந்நிலையில் இத்திரைப்படத்தில் கார்த்திகேயா மற்றும் தான்யா ரவிச்சந்திரன் ஒரே டேக்கில் நடனமாடும் புதிய டான்ஸ் ப்ரோமோ இன்று வெளியானது. ராஜா விக்ரமர்கா பட புதிய டான்ஸ் ப்ரோமோ வீடியோ இதோ…