சிபிஎஸ்இ  பத்தாம் வகுப்பு தேர்வில் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கேள்வி கேட்கப்பட்ட நிலையில் அந்த கேள்வி நீக்கப்படுவதாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.

cbcscபத்தாம்  வகுப்பு தேர்வில் சர்ச்சைக்குரிய கேள்வி நீக்குவதாக சிபிஎஸ்இ வாரியம் அறிவித்துள்ளது. மேலும் அந்த கேள்விக்கு பதிலளித்த அனைவருக்கும் மதிப்பெண் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு நேற்று முன் தினம் நடைபெற்றது. இதில் ஆங்கிலத் தேர்வில் சிறுகுறிப்பில் இருந்து கேட்கப்படும் கேள்விக்கு விடையளிப்பது போன்று இருந்தது. அதில் பெண்களை இழிவுப்படுத்தும் வகையிலும் பாலின பாகுபாட்டை ஊக்குவிக்கும் வகையில் ஒரு கேள்வி கேட்கப்பட்டிருந்தது. ஆண்களுக்கு கீழ் பெண்கள் அடங்கியிருக்க வேண்டும் என்ற ரீதியில் கேள்வி இருந்தது.

அதனைத்தொடர்ந்து  பெண்களை அவமதிக்கும் வகையில் கருத்துக்கள் கொண்ட கேள்வி இருந்ததாக சர்ச்சை எழுந்த நிலையில் அந்த கேள்வி குறித்து கடும் எதிர்ப்பு கிளம்பியதால் நிபுணர் குழுவின் பரிந்துரையை அடுத்து அந்த கேள்வியை சிபிஎஸ்சி நிர்வாகம் நீக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. மத்திய அரசின் பிற்போக்குத்தனமான கருத்தை புத்தகத்தில் திணித்ததாகவே இது காட்டியதாக பலர் கண்டனம் தெரிவித்தனர். இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் உ.பி. மாநில பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். மேலும் இதை நம்ப முடியவில்லை. இதைத்தான் நாம் குழந்தைகளுக்கு சொல்லித் தருகிறோமா? இதன் மூலம் பெண்கள் மீதான பிற்போக்குத்தனமாக கருத்துகளை பாஜக அரசு ஆமோதிக்கிறது என்பதை தெள்ள தெளிவாகிறது. இதை ஏன் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் வைத்துள்ளார்கள்? என கேள்வி எழுப்பியதுடன் அந்த வினாத்தாளை பிரதமர் நரேந்திர மோடியின் டிவிட்டருக்கும் டேக் செய்திருந்தார்.

இதையடுத்து இன்றைய தினம் நாடாளுமன்றக் கூட்டத் தொடரின் போதும் சோனியாகாந்தி சிபிஎஸ்இ தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி குறித்த பிரச்சினையை எழுப்பினார். இந்நிலையில் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கேள்வி கேட்டதை அடுத்து மத்திய அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வலியுறுத்தினார். மக்களவையில் இது குறித்து அவர் பேசியபோது மத்திய அரசு அதற்கு மறுப்பு தெரிவித்ததையடுத்து காங்கிரஸ் மற்றும் அரசியல் கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தது.

இந்நிலையில் தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி சரியா தவறா என நிபுணர் குழு ஆராய உத்தரவிடப்பட்டது. இதையடுத்து நிபுணர் குழுவின் பரிந்துரையை ஏற்று அந்த கேள்வியை நீக்குவதாக சிபிஎஸ்இ வாரியம் அறிவித்துள்ளது. அந்த கேள்விக்கு பதிலளித்த அனைவருக்கும் மதிப்பெண் வழங்கப்படும் என்றும் சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.