தமிழ் சினிமாவின் பிரபல கதாநாயகர்களில் ஒருவராக தனக்கே உரித்தான பாணியில் விதவிதமான ஆக்ஷன் த்ரில்லர், கிரைம் த்ரில்லர், ஹாரர் த்ரில்லர் & சைக்கலாஜிக்கல் த்ரில்லர் என தொடர்ந்து வித்தியாசமான த்ரில்லர் திரைப்படங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மனதில் தனக்கென தனி இடம் பிடித்தவர் நடிகர் அருள்நிதி.

அந்த வகையில் அடுத்தடுத்த த்ரில்லர் திரைப்படங்கள் அருள்நிதியின் நடிப்பில் வெளிவரவுள்ளன. இயக்குனர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில் தேஜாவு திரைப்படத்தில் நடித்து வருகிறார். அருள்நிதி அடுத்ததாக, இயக்குனர் இன்னசி பாண்டியன் இயக்கத்தில் நடித்துள்ள டைரி திரைப்படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

முன்னதாக தமிழகத்தின் பிரபல யூடியூப் சேனலான எருமசாணி யூடியூப் சேனல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமடைந்த விஜய் விருஸ் இயக்குனராக களமிறங்கும் D BLOCK எனும் திரில்லர் திரைப்படத்திலும் அருள்நிதி நடித்து வருகிறார். MNM பிலிம்ஸ் சார்பில் அரவிந்த் சிங் தயாரித்துள்ள D Block படத்தை சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் வழங்குகிறது.

கதாநாயகியாக அவந்திகா மிஸ்ரா நடிக்க உமா ரியாஸ் தலைவாசல் விஜய் கரு பழனியப்பன் அது முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் அரவிந்த் சிங் ஒளிப்பதிவில் ரான் எத்தன் யோஹன் இசையமைத்துள்ளார். இந்நிலையில் D BLOCK படத்தின் சென்சார் குறித்த தகவல் தற்போது வெளியானது. விரைவில் ரிலீசாக உள்ள த்ரில்லர் படமான D BLOCK படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.