நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் இனி செமஸ்டர் தேர்வை நேரடியாக மட்டுமே நடத்த வேண்டும் பல்கலைக்கழக மானிய குழு கடிதம் எழுதியுள்ளது.

UGC

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கல்வி நிலையங்கள் கடந்த ஆண்டு  மூடப்பட்டன. அதே நேரம் மாணவர்களுடைய கல்வி பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக, ஆன்லைனில் வகுப்புகள் எடுக்கப்பட்டன. அதேபோல் கல்லூரிகளில்  ஆன்லைன் முறையில் செமஸ்டர் தேர்வுகள் நடைபெற்றன. 

இந்த நிலையில் இரண்டாவது அலை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் வெகுவாக குறைந்துள்ளது. இதனால் ஒன்றாம் வகுப்பில் இருந்து நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன. கொரோனா பரவல் குறைந்ததையடுத்து, நடப்பு ஆண்டு பள்ளி, கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கியுள்ளன. இதனால், தேர்வுகளையும் ஆன்லைன் முறையில் நடத்தாமல் நேரடி தேர்வுகளாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.  

அந்த வகையில் இனி கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் ஆன்லைன் தேர்வு கிடையாது, நேரடியாக மட்டுமே தேர்வுகள் நடைபெறும் என பல்கலைக்கழக மானியக்குழு வலியுறுத்தியுள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களிலும் இனி நேரடி தேர்வுகள் மட்டுமே நடைபெறும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கொரோனா பரவல் தடுப்பு வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி தேர்வுகளை நடத்த வேண்டும் என அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி செயலாளர் ரஜ்னிஷ் ஜெயின் தனது கடிதம் மூலம் இதனை அறிவுறுத்தியுள்ளார்.