இஸ்ரேலில் நடைபெற்ற 2021-ஆம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகி போட்டியில் இந்தியாவை சேர்ந்த இளம் அழகி ஹர்ணாஸ் கவுர் சந்து பிரபஞ்ச அழகி பட்டம் வென்றுள்ளார். உலகின் பல நாடுகளைச் சேர்ந்த 80 இளம் அழகிகள் போட்டியிட்ட இந்த பிரபஞ்ச அழகிப் போட்டியில் ஹர்ணாஸ் கவுர் சந்து பட்டம் வென்றுள்ளார்.

முன்னதாக இந்திய திரை உலகின் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த நடிகை சுஷ்மிதா சென் கடந்த 1994 ஆம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகிப் போட்டியில் இந்தியா பெண்ணாக பட்டம் வென்றார். சுஷ்மிதா சென்னை தொடர்ந்து நடிகை லாரா தத்தா கடந்த 2000 ஆம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகி பட்டம் பெற்றார்.

இதனையடுத்து தற்போது 21 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பிரபஞ்ச அழகி பட்டத்தை இந்திய பெண்ணான ஹர்ணாஸ் கவுர் சந்து வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பஞ்சாப்பை சேர்ந்த  21 வயது மாடல் அழகியான ஹர்ணாஸ் கவுர் சந்து தனது முதல் பட்டமாக ஃபெமினா மிஸ் இந்தியா பஞ்சாப் 2019 பட்டத்தை வென்றார்.

தொடர்ந்து MISS DIVA UNIVERSE 2021 போட்டியிலும் வெற்றி பெற்ற ஹர்ணாஸ் கவுர் சந்து 2021-ஆம் ஆண்டு பிரபஞ்ச அழகியாகவும் (MISS UNIVERSE 2021) பட்டம் வென்றுள்ளார்.சுஷ்மிதா சென் மற்றும் லாரா தத்தா-வை தொடர்ந்து இந்திய திரையுலகில் ஹர்ணாஸ் கவுர் சந்து-ம் கதாநாயகியாக களமிறங்குவார் என எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.