“தமிழ்நாட்டில் ரயில் டிக்கெட் பதிவு செய்ய சமஸ்கிருதம் தெரிய வேண்டுமா?” என்று, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பி உள்ளார்.

இந்தியாவின் தென் மாநிலங்களில் இந்தி மொழியின் ஆதிக்கம் தற்போது அதிகரித்துள்ளதாகப் பரவலாக ஒரு குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

அதாவது, பாஜக தலைமையிலான மத்திய அரசு ஆட்சிக்கு வந்தது முதல், இந்தி மொழியை அனைத்து மாநிலங்களிலும் துணித்து வருவதாகத் தென் மாநிலங்களில் இருந்து கடும் எதிர்ப்பு புரல்கள் எழுந்து உள்ளன.

அதனை உறுதி செய்யும் வகையில் தான், மத்திய அரசின் பல்வேறு திட்ட அறிக்கைகள் பிற மாநில அரசுகளுக்கு அனுப்பி வைக்கப்படும் போது, அது இந்தி மொழியில் அனுபவிக்க வைக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்த நிலையில், இது தொடர்பான புகார்கள் நாடாளுமன்றம் வரை எதிரொலித்தது.

இந்த நிலையில் தான், தமிழ்நாட்டில் ரயில் பயணச் சீட்டு முன் பதிவு செய்ய, சமஸ்கிருதம் தெரிய வேண்டுமா?” என்கிற குற்றச்சாட்டும், கேள்வியும் எழுந்துள்ளன.
 
இது குறித்து  மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், தனது டிவிட்டர் பக்கத்தில், “ஐ.ஆர்.சி.டி.சி ரயில் பயணச் சீட்டு முன் பதிவுக்கு சென்றால் ஜெனரல், லேடீஸ், லோயர் பெர்த், சீனியர் சிட்டிசன், டட்கல் என்ற தெரிவுகள் இருக்கும். இவற்றுடன், திவ்யாங் என்று ஒரு தெரிவு இருக்கும்.

திவ்யாங் என்ற சமஸ்கிருத சொல்லுக்கு தெய்வீக உறுப்பு கொண்டவர் என்று தமிழில் பொருளாக கூறப்படுகிறது. 

அதாவது, மாற்றுத் திறனாளிகளுக்குப் பிரதமர் வைத்த பெயர் தான் இது. 

இந்த சூழலில் தான், அதிகாரிகளின் விசுவாசமோ என்னவோ ஐ.ஆர்.சி.டி.சி முன் பதிவில் அதனை சொருகி உள்ளார்கள்.

இப்படியாக, இந்தியாவில் சமஸ்கிருதத்தை தாய் மொழியாக கொண்டவர்கள் வெறும் 14,135 பேர் மட்டும் தான்.

ஆனால், தமிழ் மொழியினை 8 கோடி பேரின் தாய் மொழியாக இருக்கிறது. மத்திய அரசும், மத்திய அரசின் அதிகாரிகளும் நினைத்தால் வெறும் 14 ஆயிரம் பேரின் தாய் மொழியை புரிகிறதா புரியாதா என்று கூட யோசிக்காமல், திணிக்க முடியும். 

ஆனால், இவ்வளவு தொழில் நுட்ப மேம்பாடு இருந்தாலும், 8 கோடி பேரின் தாய் மொழியை முன் பதிவுக்கான தெரிவு மொழியில் இணைக்க முடியாது.

குறிப்பாக, ஆங்கிலமே திணற அடிக்கும் போது, அறவே புரியாத மொழியை எல்லாம் திணிப்பதை கை விடுங்கள். வார்த்தைகளில் புனிதம் இருந்தால் போதாது. நோக்கம் புனிதமாக இருக்க வேண்டும்” என்றும்,  மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மத்திய அரசுக்கும், மத்திய அரசின் அதிகாரிகளுக்கும் வலியுறுத்தி உள்ளார். இதனால், மதுரை எம்.பி. சு.வெங்கடேசனின் இந்த டிவிட்டர் பதிவு இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வைவரலாகி வருகிறது.

அதே போல், கோவையில் வாக்காளர் வரைவு பட்டியலில் வாக்காளர் விபரங்கள் ஹிந்தி மொழியில் இடம் பெற்ற நிலையில் வெளியிடப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

இதனிடையே, “தமிழ் மொழி படித்தவர்களுக்குத் தமிழ் நாட்டில் வேலை என்ற அறிவிப்பு மூலம் தாய்மொழி கல்வியின் முக்கியத்துவத்தை திமுக ஆட்சி முன்னெடுத்துள்ளது; ஹூஸ்டன் பல்கலைக்கழகம் தமிழ் இருக்கைக்காக ரூ. 1 லட்சம் அளிக்கிறேன்” என்று, நடிகர் ஆரி தெரிவித்துள்ளார்.